டொரண்டோ வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசல்

டொரண்டோ பொது வைத்தியசாலையில் பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு நோயாளர் எண்ணிக்கை உச்ச எல்லையை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புது வைத்தியசாலையின் மூன்று தீவிர சிகிச்சை பிரிவுகளின் நோயாளர் உச்ச வரம்பு அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நாட்டில் நிலவிவரும் பெருந்தொற்று நிலைமை மற்றும் பணியாளர்களுக்கான பற்றாக்குறை போன்ற காரணிகளால் இவ்வாறு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Annachi News

Related post