CWG: யுபுனுக்கு வெண்கலம்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான யுபுன் அபேகோன் வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

வெற்றி தொடர்பில் தனது முகப் புத்தக கணக்கில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

என் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. ஓட்ட பந்தயத்தின் ஓவ்வொரு நிமிடத்திலும் என்னை உற்சாகப்படுத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி. இது ஆரம்பம் மாத்திரமே எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை படைக்க எதிர்பார்த்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கமைய, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் (CWG) இலங்கை அணி வீரர் ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெங்கலப் பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, Men´s Discus Throw F42-44/61-64 போட்டியில் கலந்த கொண்ட இலங்கை வீரர் பாலித பண்டார வௌ்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடதக்கது.

Jesudasan

Related post