இந்த வருட இலக்குகளில் ஒன்றான பொதுநலவாய போட்டிகளில் சாதித்தமை மகிழ்சியையும், தைரியத்தையும் அளித்துள்ளதாக யுபுன் அபேகோன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் யுபுன் அபேகோன் வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்தார்.
அவர் போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்தார்.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேர்மிங்ஹம் சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள யுபுன் அபேகோன்…
(இன்றைய வெற்றி இலங்கை ரசிகர்களுக்கான எனது பரிசாகும். இதனூடாக இலங்கையில் மெய் வல்லுனர் விளையாட்டை எவ்வாறு முன்நோக்கி கொண்டு செல்வதே முக்கியம். விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்து பேசவும் எதிர்பார்க்கின்றேன்.)