பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மொன்றியல் பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அண்மையில் மொன்றியல் மற்றும் லாவலில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் இந்த சந்தேக நபருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Annachi News

Related post