உக்ரைன் படையினருக்கு மீண்டும் பயிற்சி வழங்கும் கனடா

கனேடிய அரசாங்கம் உக்ரைன் படையினருக்கு மீண்டும் பயிற்சிகளை வழங்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் நாடு ஒன்றில் உக்ரைன் படையினருக்கு இவ்வாறு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ரஸ்யா படையெடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கனடா, உக்ரைனுக்கு வழங்கி வந்த இராணுவ பயிற்சியை இடைநிறுத்திக் கொண்டது.

ஆறு மாத கால இடைவெளியின் பின்னர் கனடா மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ பயிற்சி வழங்க உள்ளது.

Annachi News

Related post