நவீன முறையில் ‘ரோபோ’ மூலமாக ஆப்பரேஷன்


விபத்தில் சிக்கிய நடிகையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவருக்கு நவீன முறையில் ‘ரோபோ’ மூலமாக ஆப்பரேஷன் முடிந்துள்ளது.

தமிழில் கோமாளி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். கடந்த மாதம் 28ம் திகதி பெங்களூரு கண்டீரவா ஸ்டிடுயோவில் நடந்த கிரீம் என்ற கன்னட படத்தின் சண்டை காட்சியில் நடித்து கொண்டிருந்தார்.

‘டூப்’ போடாமல் நடித்தார். நடிக்கும் போது, அவர் கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனை செய்ததில் அவரது வலது கால் மூட்டில் முறிவு ஏற்பட்டிருந்தது. இதனால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேற்று முன்தினம் ‘ரோேபா’ மூலம் ஆப்பரேஷன் செய்து மூட்டுகள் இணைக்கப்பட்டன. அவர் குணமடைந்து வருகிறார்.

இது குறித்து நேற்று நடிகை சம்யுக்தா ஹெக்டே கூறுகையில், “சண்டை காட்சியில் ‘டூப்’ போடுமாறு கூறினர். ஆனால், தற்காப்பு கலை கற்றுள்ளதால் டூப் வேண்டாம் என்றேன்.

”இதற்கு முன்பு கூட, பெரிய சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். அதோடு ஒப்பிடும்போது இது சிறியது தான். கால் வழுக்கியதில் விழுந்து விட்டேன்,” என்றார்.

Annachi News

Related post