”கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எந்தவித தாமதமும் இன்றி, ‘பூஸ்டர் டோஸ்’ எனப்படும் முன் எச்சரிக்கை டோஸ் செலுத்த வேண்டும்,” என, பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
குஜராத் மாநிலம் வல்சாத்தில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா ஜி அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள அதி நவீன வசதி உடைய மருத்துவமனையை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி, 75 நாட்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, அனைவரும் எந்தவித தாமதமும் இன்றி, பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும்.
இந்த அதிநவீன மருத்துவமனையை ஸ்ரீமத் ராஜ்சந்திரா ஜி அறக்கட்டளை கட்டியுள்ளதன் வாயிலாக, இந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கும்.
நம் நாட்டின் வரலாற்றில் ஸ்ரீமத் ராஜ்சந்திரா ஜிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.