புதிய பாதையில் பயணிக்க வேண்டும்: ஜனாதிபதி

எவரெனும் IMF க்கு சென்றது தவறு என்றால் அதற்கான மாற்று தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

(ஆட்சி மாறியமை மற்றும் பொருளாதார கொள்கைகள் மாறியமையால் IMF பேச்சு வார்த்தையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இப்போதும் பழைய பொருளாதார கொள்கையில் பயணிக்க முடியாது. பழைய பொருளாதார கொள்கைகளை பிடித்துக் கொண்டு முன் செல்ல முடியாது. ஆகவே புதிய பாதை அவசியம். எவரெனும் IMFக்கு சென்றது தவறு என்றால் அதற்கான மாற்று தீர்வுகளை முன்வைக்க வேண்டும்) என்றார்.

Jesudasan

Related post