போட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்களுடன் வெளிப்படை தன்மையுடன் கலந்துரையாட தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டகாரர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (05) மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் பொருளாதார சவாலை வெற்றிக் கொள்வதே முக்கியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆகவே பொருளாதார சவாலை வெற்றிக் கொள்ள இளைஞர்களின் பங்களிப்பும் தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.