ஜனாதிபதியுடன் சஜித் அணி 2 மணித்தியால தீர்மானமிக்க பேச்சுவார்த்தை

ஜனாதிபதியுடன் நேற்று (05) மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியாக அமைந்தாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று ஐ.ம.ச உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வீ. இராதா கிருஸ்ணன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி…

“ஒகஸ்டில் இடைகால வரவுசெலவுத் திட்டத்திட்டத்தை அடுத்து 22 ஆம் அரசியல் அமைப்பு திருத்தத்தையும் சமர்பிக்க எதிர்பார்த்தேன். சுதந்திரக் கட்சியின் தேசிய சபையை யோசனையை அமுல்படுத்துவது குறித்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு யோசனை உள்ளது. அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பிலேயே தீர்மானிக்க வேண்டியுள்ளது” என்றார்.

சுமார் 2 மணித்தியாலங்கள் வரை இந்த கலந்துரைiயாடல் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

Jesudasan

Related post