நிரம்பி ஓடும் காசல்ரீ

களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறி வருகின்றது.

இந்த நீர் தேக்கத்தின் மேலதிக நீர் வெளியேறுவதற்கு அணைக்கட்டின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாயில் கடந்த காலங்களில் தனது செயற்பாட்டை இழந்த நிலையில் கடந்த வருடம் இந்த வான் கதவு பொருத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்றன.

இந்த தானியங்கி வான் கதவுகள் வழியாக இன்று (06) காலை முதல் நீர் வெளியேறி வருகின்றது.

இந்த நீரானது களனி ஆற்றின் நீர் மட்டத்தை வெகுவாக அதிகரிக்கும் என்பதல் காசல்ரீ நீர்தேக்கத்தின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் கரையில் குடியிருப்பவர்களும் இந்த ஆற்றினை பயன்படுத்துபவர்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என நீர் தேக்கத்தின் கடமை நேர பொறியலாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த பிரதேசத்திற்கு மழைப்பெய்து வருவதனால் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அதிகளவான் நீர் விநியோகிக்கப்படுவதால் இந்த தானியங்கி வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

Jesudasan

Related post