ஐ.நா பொதுச் செயலாளர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதாரம் உள்ளிட்ட சவால்களை வெற்றிக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் முக்கியமானதும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து ஐ.நா பொதுச் செயலாளர் எண்டோனியோ குட்டரெஸ் இதனை தெரிவித்துள்ளார்.

சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை தயாரிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி காட்டும் அக்கறையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யும்போது, ​​சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல் உட்பட, பொதுமக்களுடன் கலந்தாலோசிப்பது மற்றும் அனைத்து தரப்பினரிடையே உரையாடலை ஊக்குவித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெண்களின் அரசியல் பங்களிப்பிற்கான இலங்கையின் முயற்சிகளை அங்கீகரித்து முன்னேற்றத்தை விரைவுபடுத்த ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கு குறித்த செய்தியில் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் உடனடி மற்றும் நீண்ட கால தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தை தொடர்ந்து கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Jesudasan

Related post