கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானம்

சமீபத்தில் நடந்த ரெய்டில், திரைத்துறையினரின் கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித் துறையினர் 4 நாட்களாக அதிரடி ‘ரெய்டு’ நடத்தினர். சென்னை, மதுரையில் 40 இடங்களில் சல்லடை போட்டு தேடினர்.

இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை: சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரொக்கம் ரூ.36 கோடி மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில், தியேட்டர் வருமானத்தை குறைத்து காண்பித்து பல கோடி வருமானத்தை மறைத்ததற்கான ஆவணங்கள், பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், பிராமிசரி நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Annachi News

Related post