ஜப்பான் பிரதமரும் ஜனாதிபதிக்கு வாழ்த்து

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்ப்பதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா (Fumio Kishida ) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கலந்துரையாடல்கள் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு விரைவான முன்னேற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசிபிக் கொள்கைக்கு ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜப்பானிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Jesudasan

Related post