தீவுகளை வைச்சி செய்யும் இந்தியா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக புளோரிடா லாடர்ஹில் ( Lauderhill) மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற நான்காவது T20யில் இந்திய அணி 59 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரிசப் பண்ட் (Rishabh Pant) அதிகூடிய 44 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார்.

தீவுகளின் பந்து வீச்சில் மெக்கோய் (Obed McCoy) மற்றும் அல்சாரி ஜோசப் (Alzarri Joseph) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 192 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய மே.தீவுகள் 19.1 ஓவரில் 132 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இதன்படி இந்தியா 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் 3-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

Jesudasan

Related post