வறண்டு கிடக்கும் லண்டன்

இங்கிலாந்தில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தேம்ஸ் நதி உள்ளிட்ட பல நீர்நிலைகள் வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

1935 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் கருதப்படுகின்றது.

இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

லண்டன் நகரம் முழுதும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடரும் வறட்சியால் லண்டனில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வறட்சியால் பல இடங்களில் காட்டுத் தீ பரவலும் வேகமெடுத்துள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல் அனல் காற்றும் கடுமையாக வீசுவதால் அங்குள்ள மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Jesudasan

Related post