அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா. பாகிஸ்தான் அல்ல


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை, மாநாடு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் புகழ்ந்து பேசியுள்ளார். கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியையும் காண்பித்தார்.

லாகூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இம்ரான் கான் பேசியதாவது: பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற காலத்தில் தான் இந்தியாவும் சுதந்திரம் பெற்றது. புதுடில்லி, தனது மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப சுதந்திரமான வெளியுறவு கொள்கையை வரையறை செய்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் ஷபாஸ் ஷெரீப் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா. பாகிஸ்தான் அல்ல. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா உத்தரவிட்டது. இதற்கு,இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதிலை பாருங்கள் எனக்கூறி வீடியோ ஒன்றை காண்பித்தார்.

ஸ்லோவேகியா நாட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் அளித்த பதிலில், நீங்கள் யார்? ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு எனக்கூறியுள்ளார். இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனை காண்பித்து இந்தியாவை புகழ்ந்து பேசிய இம்ரான் கான், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து, வாங்கவில்லை. இங்கு, எரிபொருள் விலை ராக்கெட் வீதியில் உயர்ந்து வருகிறது. மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைதனத்தை நான் எதிர்க்கின்றேன். இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.

Annachi News

Related post