பெண்ணை தாக்கி, குழந்தையை கடத்த முயற்சித்த நபர் சுட்டுக்கொலை

ஸ்காப்ரோவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை கடுமையாக தாக்கி குழந்தையொன்றை தூக்கிச் சென்ற நபரை பொலிஸார் தடுக்க முயற்சித்துள்ளனர்.

குழந்தையை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

பீல் பிராந்திய பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

42 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்திய விவகாரம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Annachi News

Related post