Jesudasan

யானை, மனித மோதல் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 3 வருடங்களில் யானை, மனித மோதல் அதிகரித்துள்ளதாக வன ஜீவ ராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 1,1110 யானைகளும் 376 மனிதர்களும் இறந்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டில் 407 யாளைகளும் 328 மனித உயிர்களும் பலியானதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. வருடத்தின் 4 மாதங்களில் 47 யானைகளும் 34 மனித உயிர்களும் பலியானதாகவும் ஜீவ ராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.Read More

வறண்டு கிடக்கும் லண்டன்

இங்கிலாந்தில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தேம்ஸ் நதி உள்ளிட்ட பல நீர்நிலைகள் வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 1935 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் கருதப்படுகின்றது. இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. லண்டன் நகரம் முழுதும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக […]Read More

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்து 092- ஆக குறைந்துள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 464- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 037- ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2,403 பேர் குணம் அடைந்துள்ளனர்.Read More

கொட்டக்கலையில் குருமார்களுக்கான பூநூல்

அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கம் மற்றும் ஸ்ரீ வித்யா வேத பாடசாலை, ஸ்ரீ வித்யா குரு பீடம் ஏற்பாட்டில் கொட்டக்கலை நகர் ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானத்தில் ஆலய குருக்களுக்கான சம்பிரதாயபூர்வமான பூநூல் மாற்றும் விழா சிவஸ்ரீ ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.  விடியற்காலை 4.30 முதல் காலை 10.00 மணி வரை நடைப்பெற்ற இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட ஆலய குருக்களுக்கு பூநூல் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீலமேகம் பிரசாந்த்Read More

Asia Cup 2022: புதிய தலைவருடன் களமிறங்க தயாராகும் பங்களாதேஸ்

ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் T20 போட்டிகளுக்கான தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அவர் எதிர்வரும் ஆசிய கிண்ண தொடருக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தான் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக சகீப் ஹல் ஹசன் இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது. ஷகிப் அல் ஹசன் வரவிருக்கும் ஆசியக் கோப்பையில் வங்காளதேச அணியை வழிநடத்துவது மட்டுமல்லாமல், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு T20 தொடரையும், அதைத் தொடர்ந்து 2022 […]Read More

சீனக் கப்பலுக்கு அனுமதி

சர்ச்சைக்குரிய சீனக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. யுவான் வாங்-5, என்ற இந்த கப்பல் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் பயன்படும்.. இதில் உயர்தர என்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களும் உள்ளன. இந்த அதிநவீன கப்பலானது, சமீபத்திய நாட்களில் தீவிர இராஜதந்திரப் பேச்சுக்கு உட்பட்டது. குறிப்பாக யுவான் வாங்-5, என்ற இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை […]Read More

அல்பர்ட்டாவில் 19 பேருக்கு குரங்கு அம்மை

குரங்கு அம்மை பாதிப்புகள் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்பட்ட நிலையில், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட 50க்கும் அதிகமான நாடுகளில் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச அளவில் 31 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கனடாவிலும் இதன் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.இதுபற்றி கனடாவின் பொது […]Read More

இலங்கையின் கொவிட் நிலைமை

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16,619 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது. அதேபோல் நேற்று 181 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகினர். இதனால் இதுவரை 667,916 ஆக உயர்வடைந்துள்ளது.Read More

சிலருக்கு அச்சம் – அர்ஜூன

தாம் தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதால் ஒரு சில விளையாட்டு கழகங்கள் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். தன்மை மேற்படி பதவியில் இருந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தாம் ஒரு போதும் விளையாட்டை பயன்படுத்தி வெளிநாட்டு சுற்றுலாக்கள் செல்ல அனுமதியளிக்க போவதில்லை எனவும் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.Read More

டிசம்பர் 6 ஆம் திகதி LPL

லங்கா பிரிமியர் லீக் (LPL) சுற்றுத்தொடர் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது. ஐந்து அணிகள் இந்த சுற்றுத்தொடரில் பங்கேற்கவிருக்கின்றன. இறுதிப் போட்டி டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சுற்றுத்தொடரின் ஏற்பாட்டாளர் சமந்த தொடன்வெல தெரிவித்துள்ளார். மூன்றாவது தடவையாகவும் லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. Read More