Annachi News

நபர் ஒருவரின் வாகனத்தை கொள்ளையிட்ட 34 வயது பெண்

றொரன்டோவில் நபர் ஒருவரின் வாகனத்தை கொள்ளையிட்ட பொலிஸார், பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். லோரன்ஸ் அவன்யூ மற்றும் வெஸ்டன் வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன தரிப்பிடத்தில் வைத்து பெண் ஒருவர், ஆண் ஒருவரை தாக்கி வாகனத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 34 வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றிப்பிட்டுள்ளார்.Read More

அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான துப்பாக்கி சட்டம் நிறைவேற்றம்

அமெரிக்க செனட் சபை, துப்பாக்கி கட்டுப்பாட்டு யோசனையை நிறைவேற்றியுள்ளது.இந்த சட்டம் அமெரிக்க வரலாற்றில் சுமார் 30 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான துப்பாக்கி சட்டமாகுமாக கருதப்படுகிறது. பதினைந்து குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து 65க்கு 33 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் இந்த யோசனைக்கு ஒப்புதல் அளித்தனர். இந்த யோசனை, கடந்த மாதம் நியூயார்க்கில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் டெக்சாஸின் உவால்டேவில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 31 […]Read More

உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் அம்பர் கிரீஸ்

20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள், உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர் கிரீஸ் எனப்படுகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் பணத்திற்காக இந்த அரியகை அம்பரை வெளிநாடுகளுக்கு […]Read More

சீனாவின் 424-வது விண்வெளி திட்டம் இதுவாகும்

சீனா நேற்று உள்ளூர் நேரப்படி காலை 10.22 மணிக்கு மார்ச்-2டி ராக்கெட் மூலம் 3 தொலையுணர்வு செயற்கைக்கோள்களை சிச்சுவான் மாகாணத்தில் ஜிசாங்க் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து அதிரடியாக விண்ணில் செலுத்தியது. 3 செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நுழைந்தன. இந்த செயற்கைக்கோள்கள் அறிவியல் சோதனைகள், நிலவள ஆய்வுகள், விவசாய உற்பத்தி பொருட்களின் விளைச்சல் மதிப்பீடு, பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்புக்கு பயன்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் மார்ச் வரிசை ராக்கெட்டின் 424-வது விண்வெளி திட்டம் இதுவாகும். சீனா […]Read More

டுவிட்டரில் பதிவு வெளியிடுவதை நிறுத்திக்கொள்வேன்” ரூபர்ட் முர்டாக்

அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல், இங்கிலாந்தின் தி சன், தி டைம்ஸ் ஊடகங்களின் அதிபராக உள்ளார் அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர் ரூபர்ட் முர்டாக் (வயது 91). இவர் நடிகை ஜெர்ரி ஹாலை காதலித்து மணந்தார். இந்த திருமணம் 2016-ல் லண்டனில் நடந்தது. அப்போது ரூபர்ட் முர்டாக் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நான்தான் உலகத்திலேயே அதிர்ஷ்டசாலி, மிக மகிழ்ச்சிகரமான நபர். இனி டுவிட்டரில் பதிவு வெளியிடுவதை நிறுத்திக்கொள்வேன்” என்று அறிவித்திருந்தார். ஆனால் தற்போது 6 […]Read More

மெக்ஸிக்கோவில் சடலமாக மீட்கப்பட்ட கனேடியர்கள்

மெக்ஸிக்கோவில் இரண்டு கனேடியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெக்ஸிக்கோவின் கரையோர சுற்றுலாத் தளமான Playa del Carmen பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் ஏற்கனவே வெளிநாட்டுப் பிரஜைகள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கியூபெக்கைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.Read More

40 ஆண்டுகளில் பதிவான மிக மோசமான பணவீக்கம்

40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த மே மாதம் கனடாவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கனடாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் நுகர்வோர் விலைச்சுட்டி 7.7 வீதமாக உயர்வடைந்துள்ளது. ஒரு ஆண்டு இடைவெளியில் கனடாவில் எரிபொருட்களுக்கான விலைகள் 34.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More

வடகொரிய பாதுகாப்பு கட்டமைப்பிற்காக 5 பில்லியன் செலவிடும் கனடா

வட அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பிற்காக கனேடிய அரசாங்கம் ஐந்து பில்லியன் டொலர்களை செலவிட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு கட்டமைப்பு பழமையானது எனவும் அதனை மேம்படுத்துவதற்கு பெருந்தொகை பணத்தை முதலீடு செய்ய உள்ளதாகவும் கனடா அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20 ஆண்டு காலப்பகுதியில் சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் இதற்கென செலவிடப்பட உள்ளது. குறிப்பாக வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளதாக அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். சில தசாப்தங்கள் ஆகவே […]Read More

இன்றும் நாளையும் றொரன்டோவில் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

இன்றைய தினமும் நாளைய தினமும் றொரன்டோ பெரும்பாக பகுதியில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. சுமார் 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான புறஉதாக் கதிர்களின் தாக்கம் அதிகளவில் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை காரணமாக காற்றின் தரம் மோசமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Read More

கனடாவில் ஆளணி வளப்பற்றாக்குறை

அனுபவம் இல்லாதவர்களை பணிக்கு அமர்த்த கனேடிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் நிலவி வரும் ஊழியப் படை பற்றாக்குறையினால் இவ்வாறு தொழில் தகைமை, அனுபவம், கல்வி தகமை என்பனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பல்வேறு நிறுவனங்கள் பணியாளர்கள் புதிய விடயங்களை கற்றுக் கொள்ள காட்டும் ஆர்வத்தை முன்னிலைப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More