Tags : DMC

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவித்தல்

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துரித தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும். 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.Read More

யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு அங்கிகள்…

யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவும் கியூமெடிக்கா (Humedica) நிறுவனமும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் (Personal Protective Equipments) வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஊடகவியலாளர்களுக்கு இந்த தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன. இடர் நிலமைகளின் போது தம்முடன் இணைந்து காத்திரமான பங்களிப்பை வழங்கும்  ஊடகவியலாளர்களின் சேவையினை கொரோனா வைரஸ் பரவல் நிலமையில் மேலும் வலுப்படுத்தும் முகமாக இந்த தனிநபர் […]Read More