இலங்கையில் கடந்த 3 வருடங்களில் யானை, மனித மோதல் அதிகரித்துள்ளதாக வன ஜீவ ராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 1,1110 யானைகளும் 376 மனிதர்களும் இறந்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டில் 407 யாளைகளும் 328 மனித உயிர்களும் பலியானதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. வருடத்தின் 4 மாதங்களில் 47 யானைகளும் 34 மனித உயிர்களும் பலியானதாகவும் ஜீவ ராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.Read More
Tags : Featured
இங்கிலாந்தில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தேம்ஸ் நதி உள்ளிட்ட பல நீர்நிலைகள் வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 1935 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் கருதப்படுகின்றது. இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. லண்டன் நகரம் முழுதும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக […]Read More
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்து 092- ஆக குறைந்துள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 464- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 037- ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2,403 பேர் குணம் அடைந்துள்ளனர்.Read More
ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் T20 போட்டிகளுக்கான தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அவர் எதிர்வரும் ஆசிய கிண்ண தொடருக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தான் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக சகீப் ஹல் ஹசன் இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது. ஷகிப் அல் ஹசன் வரவிருக்கும் ஆசியக் கோப்பையில் வங்காளதேச அணியை வழிநடத்துவது மட்டுமல்லாமல், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு T20 தொடரையும், அதைத் தொடர்ந்து 2022 […]Read More
சர்ச்சைக்குரிய சீனக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. யுவான் வாங்-5, என்ற இந்த கப்பல் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் பயன்படும்.. இதில் உயர்தர என்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களும் உள்ளன. இந்த அதிநவீன கப்பலானது, சமீபத்திய நாட்களில் தீவிர இராஜதந்திரப் பேச்சுக்கு உட்பட்டது. குறிப்பாக யுவான் வாங்-5, என்ற இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை […]Read More
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16,619 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது. அதேபோல் நேற்று 181 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகினர். இதனால் இதுவரை 667,916 ஆக உயர்வடைந்துள்ளது.Read More
தாம் தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதால் ஒரு சில விளையாட்டு கழகங்கள் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். தன்மை மேற்படி பதவியில் இருந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தாம் ஒரு போதும் விளையாட்டை பயன்படுத்தி வெளிநாட்டு சுற்றுலாக்கள் செல்ல அனுமதியளிக்க போவதில்லை எனவும் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.Read More
லங்கா பிரிமியர் லீக் (LPL) சுற்றுத்தொடர் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது. ஐந்து அணிகள் இந்த சுற்றுத்தொடரில் பங்கேற்கவிருக்கின்றன. இறுதிப் போட்டி டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சுற்றுத்தொடரின் ஏற்பாட்டாளர் சமந்த தொடன்வெல தெரிவித்துள்ளார். மூன்றாவது தடவையாகவும் லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. Read More
எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலின் விளைவாக அவர் ஒரு கண்ணில் பார்வையை இழக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தற்போது வென்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். சல்மான் ருஷ்டியின் புத்தக முகவரான ஆண்ட்ரூ வில்லி இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இது நல்ல செய்தி அல்ல. சல்மான் ஒரு கண் பார்வையை இழக்கும் சூழலில் உள்ளார். அவர் […]Read More
கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லிகள் பதிவாளரின் பரிந்துரையின் பேரில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் வழங்கிய உரிமத்தின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும் இறப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் […]Read More