இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியா முழுவீச்சில் செயற்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். முன்னணி பத்திரிகை ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்தியா முதலீடு செய்ய விரும்புவதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளில் இந்தியா ஆதரவளித்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.Read More
Tags : India
யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக 55 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்தியாவின் EXIM வங்கியுடன் இன்று (10) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். பெரும்போகத்திற்கு தேவையான 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம், இலங்கை அரசாங்கம் கடன் வசதியை கோரியிருந்தது. இந்த கோரிக்கைக்கு அமைய, யூரியா உரத்தை பெற்றுக்கொடுப்பதற்காக 55 மில்லியன் டொலர் கடன் வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உடன்படிக்கையில் […]Read More
இந்திய கடன் உதவியின் கீழ் மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு கிடைத்துள்ளது. எரிபொருளை ஏற்றிச் வந்த கப்பல் நேற்று (21) பிற்பகல் நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல், டீசல் மற்றும் சுப்பர் டீசல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பது பிரச்சினையாக உள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் […]Read More
மருந்து தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகள் சில உதவ முன் வந்துள்ளன. இதன்படி, 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண தொகையொன்று எதிர்வரும் (26) இந்திய அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக இந்நாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். நன்கொடையாக 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை வழங்குவதற்கு இந்தோனேசியாவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.Read More
இந்நாட்டில் இன்று குடியுரிமை பிரச்சினை சட்டப்படி தீர்க்கப்பட்டு விட்டாலும்கூட முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக நமது மக்கள் அனைவரும் மாறவில்லை. ஆகவே, இலங்கை அரசுடன் உங்களுக்கு உள்ள நல்லுறவை பயன்படுத்தி, முழுமையான சம உரிமையுள்ள பிரஜைகளாக மாற, எமக்கு நீங்கள் உதவுங்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்தது. கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. ராதாகிருஷ்ணன், எம். […]Read More
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் நிதி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு அமைய இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் நிதியமைச்சருடனான சந்;திப்பில் கூறியுள்ளார். கொழும்பில் […]Read More
பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தது. கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே. ராதாகிருஷ்ணன், உதயகுமார் எம்பி, கே.டி. குருசாமி, பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்திய தரப்பில் தூதுவர் கோபால் […]Read More
நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் பெசில், இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. அவரை வரவேற்பதற்காக ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் […]Read More
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுப்படவுள்ளார். அதன்படி அவர் பெப்ரவரி 6 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.Read More
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதற்கமைய இந்த ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் கையெழுத்திட்டனர்.Read More