காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து ஒன்றிணைந்த குழுவாக வெளியேற தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதால் போராட்டம் முடிந்து விட்டதென அர்த்தம் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், பிரதேச மற்றும் நகரங்களை அடிப்படையாக கொண்டு, போராட்டத்தை வலுவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.Read More
Tags : Protest
கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அட்டனில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “கோல்பேஸ் போராட்டகாரர்களை தாக்கியவர்களை எதிர்ப்போம்” என்ற தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர். அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக நேற்று மாலை (22.07.2022) இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகார பேராசை கொண்ட ரணில் ராஜபக்சவினால் […]Read More
காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் கூடாரங்களை அகற்ற பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று அதிகாலை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறுமாறு அறிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டாம், இல்லையெனில் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர். இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே […]Read More
அட்டனில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் என பெருமளவானோர் பங்கேற்றனர். அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று (19) மதியம் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களை வெற்றிபெறச் செய்வோம், இடைநிறுத்தாது நிறைவுசெய்வோம் திருடர்களை விரட்டியடிப்போம் என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், காலிமுகத்திடல் போராட்டத்துக்கு தமது முழு ஆதரவையும், மலையக மக்கள் சார்பில் வெளிப்படுத்தினர். (க.கிஷாந்தன்)Read More
கொட்டகலை – தலவாக்கலை மார்க்கத்தில் பத்தனை சந்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதி யாரால் அமைக்கப்பட்டது என்பது உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறித்த கடைத்தொகுதி சமூர்த்தி பயனாளிகளுக்கென்று 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதொன்று என்ற கோரிக்கையை முன் வைத்து 18.07.2022 அன்று குறித்த இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் சமூர்த்தி பயனாளிகளும் அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கொட்டகலை பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி […]Read More
காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 ஆவுது நாள் நிறைவடைகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்களால் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. போராட்டம் 100 ஆவது நாளை கடப்பதை முன்னிட்டு இன்றும் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞர் அணியின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் நீடிப்பதற்கு மக்கள் ஆணையில்லை […]Read More
அரசாங்கத்திற்கு எதிரான நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் மேலும் 55 பேர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களும் ஐந்து பாதுகாப்பு வீரர்களும் அடங்குகின்றனர்.Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை மற்றும் மொனறாகலை ஆகிய மலையக மாவட்டங்களில் எட்டு திக்கிலும் ‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது. மேற்படி மாவட்டங்களில் பிரதான மற்றும் சிறு நகரங்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு, […]Read More
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை மற்றும் கொட்டகலை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நகரங்களில் கடைகள் மூடப்பட்டு, மக்கள் போராட்டத்துக்கு வர்த்தகர்கள் ஆதரவு வழங்கினர். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். அத்துடன், கோட்டாகோகம கிளையொன்றும் தலவாக்கலை நகரில் உதயமானது. ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலகும்வரை போராட்டத்தை தொடரும் வகையிலேயே கோட்டா கோ கம கிளை உருவாக்கப்பட்டுள்ளது. […]Read More
ஆர்ப்பாட்டகார்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெருமளவான ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களில் 4வர் பொலிஸார் என தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியை பேணுமாறும், பொது சொத்துகளை பாதுகாக்குமாறும் ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.Read More