Tags : SAjith

நரி கூட்டத்தை விரட்டியக்க வேண்டும் – சஜித்

தனது தந்தை உயிரை கொடுத்து காப்பாற்றிய கட்சி இன்று பணத்துக்கு விலை போயுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்துவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார். ஆகவே நரி கூட்டத்தை விரட்டியக்க ஒன்றிணையுமாறும் அவர் கேட்டுள்ளார்.Read More

ரஞ்ஜன் பாராளுமன்றத்திற்கு வரும் வழி தொடர்பில் சஜித் கூறுகிறார்

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிடமாகும் முதலாவது தேசிய பட்டியல் பாரராளுமன்ற உறுப்பினர் பதவியை ரஞ்;ஜன் ராமநாயக்கவுக்கு வழங்குவதாக எதிரர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட ரஞ்;ஜன் ராமநாயக்கவுடன் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே சஜித் பிரேமதாச இதனை கூறியுள்ளார். ‘மிக்க மகிழ்ச்சி, ரஞ்சனுக்கு அரைவாசி விடுதலையே கிடைத்துள்ளது. ஜனநாயக உரிமை கிடைத்திருக்க வேண்டும். ஆகவே ரஞ்சனுக்கு அரசியல் உரிமையையும் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இழுக்க அவசியமில்லை. […]Read More

எதிரும் புதிரும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கமசிங்கவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (22) மாலை முக்கிய சந்திப்பு ஒனன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சர்வ கட்சி அரசாங்கத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.  ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதில் கலந்துகொண்டிருந்தார். அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதியால் […]Read More

ஜனாதிபதியுடன் சஜித் அணி 2 மணித்தியால தீர்மானமிக்க பேச்சுவார்த்தை

ஜனாதிபதியுடன் நேற்று (05) மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியாக அமைந்தாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று ஐ.ம.ச உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வீ. இராதா கிருஸ்ணன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி… “ஒகஸ்டில் இடைகால வரவுசெலவுத் திட்டத்திட்டத்தை அடுத்து 22 ஆம் அரசியல் அமைப்பு திருத்தத்தையும் சமர்பிக்க எதிர்பார்த்தேன். சுதந்திரக் கட்சியின் தேசிய சபையை யோசனையை […]Read More

மக்களுக்கு கனவு உலகை காண்பிக்க தயார் இல்லை – சஜித்

பொருளாதாரம் வீழ்சியை கண்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்களுக்கு கனவு உலகை காண்பிக்க தயார் இல்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலிமுகத் திடல் போராட்டகாரர்களை இன்று (18) சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஆனால் அடிப்படையாக மக்களுக்கு தேவையான கேஸ், பால்மா மற்றும் எரிபொருளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.Read More

சஜித் அதிரடி கோரிக்கை

கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க எனும் இருவர் தொடர்பில் சிந்திக்காமல் நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்கள் தொடர்பில் சிந்திக்குமாறு முப்படையினரிடம் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பில் விசேட உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிராயுதபாணியான மக்கள் மீது அடக்குமுறையும் அரச பயங்கரவாதமும் பிரயோகிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் மீது அநீதியாக அடக்குமுறையை பிரயோகித்து மிலேச்சத்தனமாக குரூர தாக்குதல் […]Read More

எதிர்க் கட்சித் தலைவர் அவசர அறிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே பிரதமரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களை இனம் கண்டு அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதுவரை அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டத்தை ஒருசிலர் கறும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் குழப்பியதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் […]Read More

“வங்குரோத்து அரசியல்”

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலையிலும் கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மஞ்சள் ஆடை அணிந்து இறுதிப் போட்டியை பார்வையிட ஏற்பாடு செய்த நிகழ்வை, வங்குரோத்து அரசியலில் ஈடுபடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிகளால் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற முன்னெடுப்பதற்காக அதனைப் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த மாபெரும் வெற்றிக்காக ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் இருக்கும் இந்நேரத்தில், வங்குரோத்து அரசியலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் […]Read More

பொறுப்பை கையளித்து விட்டு செல்லுங்கள் – சஜித்

மக்களை வாழ வைக்க முடியாவிடின் அரச பொறுப்பை கையளித்து விட்டு கோட்டா, ரணில் அரசாங்கம் வீடு செல்ல வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுள்ளார். ஐ.ம.ச தலைமை காரியாலயத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். (எம்மிடம் பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளது. அதாவது சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து பிரச்சினைகளுன்கு தீர்வுகளை வழங்கிய பின்னர் குறுகிய காலத்திற்குள் மக்கள் வாக்குகளை பெற்று 5 வருட ஆட்சியை கொண்டு […]Read More

பிதமர் பொறுப்பை ஏற்ற தற்போதும் தயார்- சஜித்

பிதமர் பொறுப்பை ஏற்ற தற்போதும் தாம் தயார் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ஆனால் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள ஒரு போதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்க தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.Read More