Tags : SJB

எதிரும் புதிரும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கமசிங்கவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (22) மாலை முக்கிய சந்திப்பு ஒனன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சர்வ கட்சி அரசாங்கத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.  ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இதில் கலந்துகொண்டிருந்தார். அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதியால் […]Read More

ஒருமித்த பயணத்தின் தொடங்கம் – டலஸ்

இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடங்கமாகும் எனவும், பாராளுமன்னத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இத்தருணத்தில் நாட்டு மக்களுக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்,இந்நாட்டின் அரசியலுக்கு உண்மையான புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்த வன்னம் […]Read More

மக்களுக்கு கனவு உலகை காண்பிக்க தயார் இல்லை – சஜித்

பொருளாதாரம் வீழ்சியை கண்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்களுக்கு கனவு உலகை காண்பிக்க தயார் இல்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலிமுகத் திடல் போராட்டகாரர்களை இன்று (18) சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஆனால் அடிப்படையாக மக்களுக்கு தேவையான கேஸ், பால்மா மற்றும் எரிபொருளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.Read More

நாட்டை விரைவில் கட்டியெழுப்ப வேண்டும்: ஐ.ம.ச

நாட்டை விரைவில் கட்டியெழுப்ப வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அந்த கடினமான காரியத்திற்கு தலைமைத்துவம் வழங்க எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தயார் எனவும் அவர் கூறியுள்ளார். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Read More

எதிர்க் கட்சித் தலைவரே மாற்று பிரதமர்

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகும் போது எதிர்க் கட்சித் தலைவரே மாற்று பிரதமராக பாராளுமன்றத்திற்கு இணங்க நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.Read More

ஹிருணிக்கா உள்ளிட்டோருக்கு பொலிஸ் பிணை

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்குமாறும் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, ஹிருணிக்கா பி​ரேமச்சந்திர ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரிய போதிலும் பாதுகாப்புத் தரப்பினர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அவருடன் வந்த மேலும் சிலர் ஜனாதிபதி […]Read More

ஆத்திரமடைந்த சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு இதுவரை உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். (மக்களின் பிரச்சினைகள் அரசாங்கத்திற்கு தெரியவில்லையா? அவர்களுக்கு இதயம் இல்லையா? எமக்கு சுய கௌரவம் உள்ளது. பதவிகளுக்காக […]Read More

ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுப்ட்டார்கள் என கைது செய்வதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வீடியோ காட்சிகளை பயன்படுத்தி பொலிஸார் கைது செய்து வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.Read More

பிதமர் பொறுப்பை ஏற்ற தற்போதும் தயார்- சஜித்

பிதமர் பொறுப்பை ஏற்ற தற்போதும் தாம் தயார் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ஆனால் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள ஒரு போதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்க தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.Read More

வெட்கத்துடன் கூடிய பயம் உண்டு

கொள்கைகளை காட்டி கொடுக்காத தமது உறுப்பினர்களுக்கு வெட்கத்துடன் கூடிய பயம் உண்டு என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ‘கொள்கைகளை காட்டிக் கொடுக்காது ஒரே நிலையில் இருந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மானம், மரியாதை உள்ளவர்கள் எனவும் அவர் கூறினார். அதேபோல் கொள்கைகளுக்கு துரோகம் செய்யாமல் சரியான நிலையில் இருந்த சுயமரியாதையை பேணுமாறு அவர் தெரிவித்துள்ளார்.Read More