ATP இறுதி போட்டியை நழுவ விட்ட ரப்பேல் நடால் மற்றும் நோவக் டிஜோகோவிக்

ATP இறுதி போட்டியை நழுவ விட்ட ரப்பேல் நடால் மற்றும் நோவக் டிஜோகோவிக்

20 தடவை கிராம் ஸ்லாம் சம்பியனான ரபேல் நடால் இன்று லண்டனில் நடைப்பெற்ற ATP அரை இறுதியில் ரபேல் நடால் வெற்றி பெறுவார் என அவரது ரசிகர்கள் மட்டுமல்ல உலக டெனிஸ் ரசிகர்களே எதிர்பார்த்தார்கள்

ஆனால் இன்று அவருக்கு நேரம் சரியில்லை என்றே சொல்லலாம் . அவரோடு அரை இறுதியில் ரஷ்ய வீரான 24 வயதை கொண்ட இளம் வீரர் டெனில் மெதிவ்டேவ் நாடலை 3- 6 , 7-6( 4) , 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு தெரிவானார்

அதே போன்று மற்றைய அரை இறுதி போட்டியில் உலக டென்னிஸ் தரப்படுத்தலில் முதல் இடத்தில் இருக்கும் நோவாக் டிஜோகோவிக்கை எதிர்த்து ஆடிய டொமினிக் தீம் 7-5, 6-7( 10-12), 7-6( 7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் நடைப்பெற்றது. இம்முறை உலக டென்னிஸ் ஜாம்பவான்கள் அதாவது தரவரிசையில் ஒன்றாம் இரண்டாம் இடங்களில் இருக்கும் இருவரும இல்லை என்பதை கவலையோடு தெரிவிக்கிறோம

administrator

Related Articles