உள்ளுராட்சி தேர்தல் – அரவிந்தகுமார் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன கூட்டணியாக இணைந்து தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதி பொது செயலாளர் எஸ்.அஜித்குமார் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே முன்னணியின் பிரதி பொது செயலாளர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க […]

சென்னை அயலக தமிழர் விழாவில் மனோ பங்கேற்பு !

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 11, 12 ஆகிய தினங்களில் தமிழக அரசு சென்னையில் நடத்தும் அயலக தமிழர் தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. “தாய் தமிழ்நாட்டில் பிரமாண்ட கொண்டாட்டம். அயலக தமிழர் தினம். உலகெங்கும் உள்ள சாதனை தமிழர்களுடன் கலை நிகழ்சிகள், உலக தமிழ் சங்கங்களுடன் கலந்துரையாடல், நலத்திட்டங்கள், சிறப்பு அமர்வுகள். சிறப்பு […]

இலங்கையில் மீண்டும் ஆட்டம் காணும் கொரோனா

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாவோர் இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி நேற்றையதினம் புதிதாக நால்வர் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் நேற்றுடன் மட்டும் ஆறு இலட்சத்து 71 ஆயிரத்து 927 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!

மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் ஆரம்பித்து 1299KM பயணம் செய்து மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இடத்திலே தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவரது பயண விபரங்கள் இதோ,

மனைவியை விட்டுவிட்டு மாமியாருடன் தலைமறைவாகியுள்ள மருமகன்!

தனது மனைவியை விட்டுவிட்டு மனைவியின் தாயான மாமியாருடன் மருமகன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இந்த்தியாவில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் சண்முகம் என்பவர் தனது மூத்த மகள் பூர்ணாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் நாளடைவில் சுமன் தனது மாமியின் கவர்ச்சியில் இழுக்கப்பட்ட நிலையில் மாமியாருடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது . நேற்று முந்தினம் மாமாவும் மருமகனும் மது அருந்தியதாகவும் இதனால் அதிக போதையில் மாமா […]

கட்டண உயர்வுக்கு எதிராக இன்று அரை மணிநேரம் நாடு இருளில் மூழ்கும்

மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று (8) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “தயவுசெய்து இதற்கு எதிராக மௌனப் போராட்டம் நடத்துங்கள். அரை மணி நேரம் விளக்குகளை அணைத்துவிட்டு நாங்கள் போராட்டம் நடத்தலாம்.” இதேவேளை, பௌர்ணமி தினமான நேற்று (06) மின்வெட்டுக்கு மகா சங்கரத்தினர் உள்ளிட்ட பல தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இலங்கை அணி திரில் வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி நேற்று  மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 56 குசல் மென்டிஸ் 52 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் சரித் அசலங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக் […]

முக்கிய வீரர்கள் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வுபெற வேண்டும்- கவுதம் காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஐபிஎல்- போட்டிகள் அவ்வளவு முக்கியமில்லை என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக இருந்தவர் கெளதம் கார்த்திக். இவர், தற்போது பாஜக சார்பில், மா நிலங்களை எம்பியாக பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வீரர்கள், ஆட்டம், குறித்து விமர்சனம் செய்து வரும் கவுதம் காம்பீர், தற்போது, ஐபிஎல் போட்டிகள் குறித்துக் கருத்துக் கூறியுள்ளார். அதில், 4 […]

கால்பந்து மன்னன் பீலே உடல் கல்லறை தோட்டத்தில் அடக்கம்: பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

கால்பந்து வீரர் பீலேவின் உடல், இன்று பிரேசிலின் சான்டோஸ் நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டின் பிதாமகன் என்று போற்றப்படும் பிரேசில் வீரர் பீலே, கடந்த டிசம்பர் 29ம் திகதி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருந்தார். இந்நிலையில் சான்டோசில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நாடு முழுவதும் இருந்து சான்டோஸ் நகருக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, […]

ரிஷப் பண்ட்க்காக பாக்கிஸ்தான் வீரர்களின் பிரார்த்தனைகள் – நெகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட் பயணித்த மகுழூந்து கட்டுப்பாட்டை கட்டுப்பாட்டை இழந்து நேற்று விபத்துக்குள்ளாகியிருந்தது. பலத்த காயங்கள் அடைந்த அவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் க்கு பாக்கிஸ்தான் அணியின் வீரர்களும் விரைவில் குணமடைவதற்கான பிரார்த்தனைகளை செய்வதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் ஷா அப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் விரைவில் மீண்டு வா என டுவிட்டர் இல் […]