ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை

சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே, அன்பான நாட்டு மக்களே, உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே, அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தி, நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீழப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன். 75 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சுதந்திரம் பெற்றபோது, புகழ்பெற்ற […]

“நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டும்

“இலங்கை அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அழுத்தத்தை தொடர்ந்தும் உணர ஆரம்பித்துள்ளமையை நான் அறிவேன். இந்த அழுத்தம் தாங்க முடியாத சுமையாக இருக்கலாம். இது ஸ்திரமின்மை, தனிமை மற்றும் பயங்கரமானதாக இருக்கலாம். நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு இலங்கையரும் அறிய வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சிறந்த விலைமதிப்பற்ற பொதுநலவாய குடும்பத்தின் ஒரு பகுதியாவீர்கள் என பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவித்தார். புவிசார் அரசியல் வரைபடவியலாளர்களுக்கான ஆரம்ப விரிவுரையை ஆற்றியபோதே அவர் […]

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்

“நழிவடைந்துள்ள சகல துறைகளும் கட்டியெழுப்பப்பட்டு, பொருளாதார ஸ்திரமிக்க நாடாக எமது நாட்டை உயர்த்த வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை என்பதை இந்நாளில் நினைவூட்டிப் பார்ப்பதே சிறந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது 75 வது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கரங்களைப் பலப்படுத்தி, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை சுபீட்சமானதும் வளமிக்கதுமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் […]

75ஆவது தேசிய சுதந்திர தின விழா (Photos)

75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், “நமோ நமோ தாயே நூற்றாண்டுக்கான முதற்படி” எனும் தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்று (04) முற்பகல் காலிமுகத்திடலில் நடைபெற்றது. மிகக் குறைந்தச் செலவில் பெருமைக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் பிரதான நோக்கம் இலங்கையர்களின் பெருமையை மீண்டும் உலகுக்கு வெளிக்காட்டுவதாகும். ஜனாதிபதியின் வருகையைக் குறிக்கும் வகையில் இலங்கை இராணுவத்தினர் இசைவாத்தியங்களை இசைத்த பின்னர், பாதுகாப்பு படைகளின் […]

சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி

202, 2023 ஆண்டுகளில் சீனாவுக்கு இலங்கை செலுத்த வேண்டியிருந்த கட்ன் மற்றும் அதற்கான வட்டியை பெற்றுகொள்ளாதிருக்க சீனா முன் வந்துள்ளது. இது தொடர்பில் இலங்கை நிதியமைச்சை தெளிவுப் படுத்தியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிக்ஹிங் தெரிவித்துள்ளார். சலுகை அடிப்படையில் மேற்படி உதவியை வழங்குவதாக அவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். இந்த சலுகை இலங்கைக்கு குறுகியகால உதவியகாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உதவியை சீனாவின் எக்சிம் வங்கியூடாக வழங்கவுள்ளதாக […]

தலதா மாளிகையில் விசேட பூஜை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஆரம்பமாக கண்டி தலதா மாளிகையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இதேவேளை, 75ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விக்டோரியா அணைக்கட்டுக்கு முன்பாக நடைபெற்ற சிறப்பு பிரித் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

ஆபிரிக்க கண்டத்துடனான உறவைப் பலப்படுத்துதல்

தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார். ஆபிரிக்க தூதுவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, சிரமமான காலகட்டத்தின்போது இலங்கையும் ஆபிரிக்காவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கியமையையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். மேலும் இலங்கைக்கும் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் பொதுவான சட்ட முறைமை இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார். ஆபிரிக்க […]

75ஆவது சுதந்திர தினம்

இலங்கை திருநாட்டின 75ஆவது சுதந்திர தினம் பெரும் பெருமிதத்துடன் இன்று கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தின பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறுகின்றது. ஜனாதிபதி நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்ததுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுதந்திரதினத்தை முன்னிட்டு காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். அதேபோல் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினரின் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கரு ஜயசூரியக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது

முன்னாள் சபாநாயகரும் நன்மதிப்பிற்குரிய அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கரு ஜயசூரிய தேசத்திற்கு ஆற்றிய, சிறந்த சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கரு ஜயசூரிய அவர்களுக்கு பதக்கம் அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வின் போது ‘கரு ஜயசூரியவின் பெருமைமிக்க வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகள்’ எனும் […]

IMF – China

IMFடம் இருந்து இலங்கை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என சீனா மீண்டும் தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாஓ நின்க் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அவர் இலங்கை விடயத்தில் சீனா தலையீடு செய்வதை நிறுத்தி, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில்அண்மையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் சீன […]