கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன் நிற்கிறார்கள் – கனடா பிரதமர்

இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ரயில் விபத்தின் காட்சிகளை பார்த்து தன் இதயம் நெருங்கி போய் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரயில் விபத்தின் படங்கள் தனது இதயத்தை உடைத்துவிட்டதாக “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் […]
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட நாடுகள்

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட நாடுகள் பல உள்ளன. நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது. அதாவது ஒரு passport வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதே ஆகும் .அந்த வகையில் முதலிடத்தை ஜப்பானும் , இரண்டாவது இடத்தை சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளும் மூன்றாவது இடத்தை ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளும் பிடித்துள்ளன. அதேவேளை அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா ஆகியநாடுகள் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. 1. ஜப்பான் (193 இடங்கள்) […]
கனடா செல்ல இருந்த இந்திய பிரஜை

இலங்கை வழியாக கனடா செல்வதற்காக இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில், விமானத்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை (1) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவத்தில் கே. ஜோர்ஜ் (65) என்ற இந்தியப் பிரஜையே உயிரிழந்துள்ளார். விமானத்தில் இருந்து தவறி விழுந்த இந்திய பிரஜை சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் கட்டினாயூவில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்ப பாடசாலையொன்றின் கழிப்பறையில் இவ்வாறு இரகசிய கமரா பொருத்தப்பட்டுள்ளது. கட்டினாயூ பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க பொலிஸார் விரைந்துள்ளனர். பொலிஸார் குறித்த கமராவை மீட்டு உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரகசிய கமரா எவ்வளவு காலம் கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்தது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை. சில வாரங்களுக்கு முன்னதாக இதே பாடசாலை […]
கனடாவில் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு…..

கனடாவில் முகநூல் மட்டும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு அவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த இரண்டு சமூக ஊடகங்களிலும் செய்திகளை முடக்கும் பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே கனடாவில் google நிறுவனம் இதேபோன்று செய்திகளை முடக்கும் ஓர் பரீட்சார்த்த முயற்சியை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொண்டிருந்தது. லிபரல் அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பில் சி-18 என்னும் சட்டம் காரணமாக இவ்வாறு பரீட்சார்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. […]
கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து எச்சரிக்கை

மட்பாண்டங்களில் சமைத்து உண்பது ஆரோக்கியமானது என நாம் கேள்விபட்டிருக்கின்றோம். எனினும், கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை மண் சட்டி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரோரா குக் வெயார்ஸ் நிறுவனத்தின் மட் பாண்டங்கள் பற்றி இவ்வாறு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.கனடாவின் சுகாதார திணைக்களம் இது பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வகை சட்டிகள் அடுப்பில் வைத்ததன் பின்னர் வெப்பமடைந்து வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் ஜனநாயகத்தை மதிப்பதில் பெண்களுக்கு முதலிடம்

கனடாவில் ஜனநாயகத்தை கூடுதலாக மதிப்பது பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சமூக பெறுமதிகளையும் ஜனநாயகத்தையும் அதிகளவில் மதிக்கும் பண்பு பெண்களிடம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல் வெளியிட்டுள்ளது. ஆண்களை விடவும் ஒப்பீட்டளவில் பெண்கள் ஜனநாயக பெறுமதிகளை கூடுதலாக மதிக்கின்றார்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டத்திற்கு மதிப்பளித்தல், பல்வகைத்தன்மை, இன, கலாச்சார பல்வகைமை மற்றும் பழங்குடியின கலாச்சாரம் போன்ற பல விடயங்களில் பெண்கள் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் போராடிய கனடிய முன்னாள் படைவீரர் பலி

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் சார்பில் சண்டையிட்ட கனடாவின் முன்னாள் படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கிற்கு சென்று அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்ட முன்னாள் படைவீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு குறித்த நபர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிலால் கான் என்ற இந்த நபர் கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் போரில் உயிரிழந்து விட்டதாக கனடிய இராணுவம் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது. அமரசிங்கம், குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் […]
வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் சேவையாற்றுவேன் – டெனியல் ஸ்மித்

தேர்தலில் தமக்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரேவிதமாக சேவையாற்ற உள்ளதாக அல்பர்ட்டா மாகாண முதல்வர் டெனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார். அனைத்து அல்பர்ட்டா மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் சக்தி வள கொள்கைகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கொண்டு மாகாணத்தை வழிநடத்த உத்தேசித்துள்ளதாக டெனியல் ஸ்மித் […]
கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்

கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெடிசன் ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்டர்ஊப் பகுதியில் காணாமல் போயிருந்தார்.20 வயதான பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிறந்த நாள் விருந்துபசாரமொன்றில் கலந்து கொண்டிருந்த போதே மெடிசனை இறுதியாக பார்த்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரணம் தொடர்பில் […]