நடிகர் சரத்பாபு காலமானார்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், ஹைதராபாத் […]

ரஜினி + கபில்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி சென்னையிலிருந்து மும்பைக்கு சென்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.  

நடிகர் மனோபாலா காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் காலமானார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கிறார்

சிம்பு நடிக்கும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ2, கனெக்ட் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம்

நயன்தாரா, ஜெயம் ரவி ஜோடியாக இறைவன், இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 புதிய படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட், மலையாளத்தில் கோல்டு, தெலுங்கில் காட் பாதர் ஆகிய 5 படங்கள் வந்தன. ஓ2, கனெக்ட் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. தற்போது […]

விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம்

வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர […]

படப்பிடிப்புக்காக டெல்லி வழியாக செல்ல நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ந் தேதி ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 60 சதவீத அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7ந் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் விமானம் மூலம் 15ந் தேதி […]

சுவாரஸ்யமான கதைக் களத்தில் அதிரடி திரில்லர் படமாக தயாராகிறது……

இந்தப் படத்தை ஐ.அஹமத் டைரக்டு செய்துள்ளார். சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரித்துள்ளனர். படம் குறித்து படக்குழுவினர் கூறும்போது, “சுவாரஸ்யமான கதைக் களத்தில் அதிரடி திரில்லர் படமாக தயாராகிறது. உலகம் முழு வதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் கதையம்சத்தில் உருவாகி உள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி சரியான நேரத்தில் முடித்துள்ளோம். அஹமதுவின் முந்தைய வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், ஜனகனமன படங்களை போலவே இதுவும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும்”என்றனர். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தை நடிகர் […]

கூலிப்படைகள் வாழ்க்கையின் உணர்ச்சிகளை பற்றிய படம்

இதில் ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பிரதீப்குமார், விஷ்னோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பாலாவிடம் உதவியாளராக பணியாற்றிய விவேக் கே.கண்ணன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “இது பணத்துக்காக கொலைகள் செய்யும் கொலைகாரர்கள் பற்றிய உணர்ச்சி மிகுந்த படமாக இருக்கும். அதிரடி படம் கிடையாது. ஆனால் கூலிப்படைகள் வாழ்க்கையின் உணர்ச்சிகளை பற்றியதாக இருக்கும். சென்னை, மும்பை, காஷ்மீர் […]

தோனி என்டர்டெயின்மெண்ட்

‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமிழ் படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.