ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 91 ஓட்டங்களையும் தனஞ்சய த சில்வா 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் Fazalhaq Farooqi மற்றும் Fareed Ahmad Malik ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை […]

டோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றி

எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டோனி மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இலங்கை – ஆப்கானிஸ்தான் முதல் ODI இன்று, மதீஷவுக்கு வாய்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை இன்றைய போட்டியில் IPLலில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.

மத்திஷவை பார்த்து கொள்ள தயார் தோனி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் புகழைப் பெற்ற மத்திஷவுக்கு எதிர்வரும் ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. தனது பந்துவீச்சு நிலைப்பாட்டினால் கிரிக்கெட் உலகையே கைப்பற்றிய லசித் மலிங்கவுக்குப் பிறகு இன்று கிரிக்கெட் களத்தில் அதிகம் பேசப்படும் பந்து வீச்சாளர் இளம் வீரர் மதிஷ பத்திரன. மதிஷ 2020 ஆம் ஆண்டு முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணியில் இணைந்தார். மதிஷ அபுதாபி T10 லீக்கில் விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்தினார், […]

ஆப்கான் கிரிக்கெட் பிரபலத்திற்கு வந்த சோதனை

ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகளுக்கு இடையிலான இடையிலான ஒருநாள் தொடர் நாளை ஹம்பாந்தோட்டையில் தொடங்குகிறது. அந்த போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ரஷித் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 02 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.

ICCக்கு நெருக்கடி?

உலகக் கிண்ணத்திற்க்கு முன்பாக பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் வர மறுத்தால், பாகிஸ்தான் அணியும் உலகக் கிண்ண தொடருக்கு இந்தியா செல்லாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜீம் சேத்தி தெளிவாகக் கூறியதை அடுத்து பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிசி தலைவர் கிரெக் பார்க்ளே, சிஇஓ ஜெஃப் அலார்டிஸ் ஆகியோர் லாகூருக்கு வந்துள்ளதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுக முடிவு […]

IPL முடிவில் பத்திரணவுக்கு கிடைத்த மற்றுமொரு இடம்

2023 IPL போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை பிரபல விஸ்டன் பத்திரிக்கை பெயரிட்டுள்ளது. அந்த அணியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரனவும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். விஸ்டன் இதழால் பெயரிடப்பட்ட 2023 ஐபிஎல் அணி கீழே… ஃபாஃப் டு பிளெசிஸ் (RR) யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR) சுப்மன் கில் (GT) சூர்யகுமார் (MI) ஹென்ரிச் கிளாசென் (SRH) ரிங்கு சிங் (KKR) ரவீந்திர ஜடேஜா (CSK) ரஷித் […]

வெற்றியை கண்ணீருடன் கொண்டாடினார் தோனி

மகேந்திர சிங் தோனி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தை பிடித்துள்ளார். நேற்று, தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக IPL கிண்ணத்தை வென்றதும் தோனி பற்றிய உலகப் பேச்சு உச்சத்தை எட்டியது. இதேவேளை, ஒரு பேட்ஸ்மேனாக, வழமையான பாரிய தாக்குதல்களுக்கு செல்லாவிட்டாலும், கேப்டனாகவும், விக்கெட் காப்பாளராகவும் தனது பொறுப்பை, போட்டி முழுவதும்  திறமைக்கு ஏற்றவாறு நிறைவேற்றினார். மிகவும் அமைதியான கிரிக்கெட் கேப்டனாக தோனி அனைவரிடமும் பிரபலமானார். உலகக் கிண்ண […]

CSKக்கு 20, GTக்கு 13

10வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 5வது முறையாக IPL சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. 2 ஆண்டு தடை காரணமாக இதுவரை 14 சீசனில் மட்டுமே பங்கேற்று இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல்.சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்து, கிண்ணத்தை […]

கிங்ஸ்க்கு மீண்டும் மகுடம்

CSK அணி  5 ஆவது முறையாகவும் IPL சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அகதபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் (GT) அணியை டக்வர்த் லூயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் CSK வென்றது. இதன்மூலம் IPL 2023 தொடரில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. 215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு […]