அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு விடலாம் என்று கருதி அந்த முடிவை கைவிட்டனர். ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் […]

பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டன் பிளிங்கன் சீனாவுக்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வருடங்களாக தடைப்பட்டுள்ள உயர் மட்ட கலந்துரையாடலில் பிளிங்கன் பங்கேற்க இருந்த நிலையில் தனது விஜயத்தை அவர் இரத்து செய்துள்ளார். எனினும் அமெரிக்க வான் பரப்பில் சீனாவின் கண்காணிப்பு பலூன்கள் பறப்பதால் பிளிங்கன் தனது விஜயத்தை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறான சீனாவின் செயற்பாடு அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என சாடியுள்ள பிளிங்கன் […]

குறி வைத்து தாக்கப்பட்ட பாலஸ்தீன ராக்கெட் ஆலை

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர் கதையாய் நீண்டு வருகிறது. சமீபத்தில் அந்த பிராந்தியத்துக்கு வந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், அமைதிக்கு அழைப்பு விடுத்த நிலையில் இரு தரப்பு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இஸ்ரேல் விமானங்கள், பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியில் உள்ள ராக்கெட் உற்பத்தி ஆலையை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நேற்று முன்தினம் […]

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 எம்.பி.க்களுக்கு முக்கிய பதவிகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 எம்.பி.க்களுக்கு அமெரிக்காவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எம்.பி.க்கள், ராஜா கிருஷ்ணமூர்த்தி (வயது 49), அமி பெரா (57) , பிரமிளா ஜெயபால் (57 ), ரோகன்னா (46) ஆவார்கள். இவர்கள் 4 பேரும் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். * ராஜா கிருஷ்ணமூர்த்தி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் சபையின் சீனாவுக்கான ‘ரேங்கிங்’ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் நடத்தையின் பல்வேறு அம்சங்கள், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் […]

ரேக்ளா வண்டி

செட்டிமேடு பகுதியை சேர்ந்த கோபால்-கண்ணகி தம்பதியின் மகன் விஜய் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்-மேரி தம்பதியின் மகள் ரம்யாவுக்கும் இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் அவர்களது குலதெய்வம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு மணமகன் விஜய், மணமகள் ரம்யாவை குலதெய்வம் கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள தனது வீட்டுக்கு 2 மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். இதற்காக மாடுகள் மற்றும் ரேக்ளா வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு […]

தமிழ் நாட்டிற்கு ஏமாற்றம்

மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. […]

 இந்திய Budject

இந்திய பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று (01) ஆரம்பமானது. இதை தொடர்ந்து மக்களவையில் வரவு செலவுத் திட்டத்தை  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயற்பாடுகளை முதலில் பட்டியலிட்ட நிதி அமைச்சர், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த […]

நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டு எலெக்ட்ரிக்கல் கடையில் தீ

சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம். இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்தக்கடையில் தரை தளம் உட்பட 5 தளங்களில் பல்வேறு மின் சாதனங்கள் மற்றும் பிளம்பிங் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ரவி அருணாச்சலம் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் எலெக்ட்ரிக்கல் கடையில் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதனைப் […]

நிவாரணம் கேட்டு கிளியின் உரிமையாளர் மீது கோர்ட்டில் வழக்கு

தைவானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஹூவாங் கிளியுடன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். அப்போது அங்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லின் என்பவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹூவாங்கின் கிளி திடீரென பறந்து சென்று, டாக்டர் லினின் முதுகில் கால்களை வைத்து நின்று இறக்கையை பலமுறை அசைத்தது. இதில் டாக்டர் லின் திடுக்கிட்டு கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்பு […]

காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம்

தொழிலாளிகளை ஒருமையில் திட்டுவது, உரிமைகளை மறுப்பது, பண்ணையார்களைப் போல அடித்து உதைப்பது, பாதுகாப்பு உபகரணங்களை தரமறுத்து தொழிலாளிகளை கொல்வது, கொதிக்கும் உலைகளுக்கு தொழிலாளிகளை காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் வெளிநாடுகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தாய்லாந்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி நிறுவனம் ஒன்றின் காவலாளியை நித்தமும் திட்டித் தீர்த்து வந்ததால் அந்த காவலாளி கையாலேயே முதலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டிருக்கிறது. சாவத் ஸ்ரீராட்சலாவ் என்ற 44 வயதுடைய காவலாளி அரோம் […]