லிபரல் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த என்.டி.பி கட்சி தலைவர்

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவதாக என்.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போதியளவு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளாத, லிபரல் அரசாங்கத்திற்கு என்.டி.பி கட்சி ஆதரவினை வழங்கி வருகின்றது. குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் மாதத்திற்குள் மருந்து சீட்டுகளுக்கு அரசாங்கம் வழங்கும் […]

ஹமாஸ் இயக்கத்தின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் மீது தடை – கனடா

ஹமாஸ் இயக்கத்தின் சில முக்கிய பிரமுகர்கள் மீது கனடா தடைகளை அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த விடயத்தை குறிப்பிட்டு;ள்ளார். ஹமாஸ் இயக்கத்தின் பத்து பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் மீதும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் இயக்கம் ஓர் பயங்கரவாத இயக்கம் என வெளிவிவகார அமைச்சர் ஜோலி குறிப்பிட்டுளளார். […]

துருக்கிக்கு ஆயுத விற்பனை செய்ய கனடிய அரசாங்கம் இணக்கம்

துருக்கிக்கு மீண்டும் ட்ரோன் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து என்பன உள்வாங்கப்படுவதற்கு அண்மையில் துருக்கி இணக்கம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய கனடிய அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது. இதன்படி விரைவில் துருக்கிக்கு கனடா ஆயுத ஏற்றுமதிகளை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தற்போதைக்கு துருக்கிக்கான ஆயுத ஏற்றுமதி தடை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. துருக்கிக்கு ஆயுத […]

சர்வதேச மாணவர்களால் கனடாவுக்கு பெரும் வருவாய்

கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடா பிரதமர் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டாலும், கனடாவைப் பொருத்தவரை, சர்வதேச மாணவர்களால் கனடாவுக்கு பெரும் வருவாய் உள்ளது. அதுவும், இந்திய மாணவர்கள் ஏராளமானோர் கனடாவில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆக, இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பாதிக்கப்பட்டதால், கனடாவுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு சிக்கல் என்றாலும், அதே […]

பல ஆண்டுகளின் பின்னர் சொத்து வரி இரட்டை இலக்க சதவீதத்தினால் உயர்வு

ரொறன்ரோவில் உரிமையாளர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரித் தொகை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 10.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோவ் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளார். மேயராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முதல் வரவு செலவுத் திட்டத்தில், இவ்வாறு வரி அதிகரிப்பு அறிவிக்கப்பட உள்ளது. நீண்ட இடைவெளியின் பின்னர் கூடுதல் தொகையில் வரி உயர்வு அறிவிக்கப்பட உள்ளது. ரொறன்ரோ நகர நிர்வாகம் பெருந்தொகை பாதீட்டுப் பற்றாக்குறையை […]

ரொறன்ரோ பனிப்புயல் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் பனிப்புயல் தொடர்பில் சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ளது. ரொறன்ரோ பகுதியின் ஒரு சில இடங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பனிப்புயல் நிலைமையை அவதானிக்க முடியும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாகத்தின் சில இடங்களில் 25 சென்றிமீற்றர் அளவில பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பனிப்புயல் ரொறன்ரோ பெரும்பாகத்pதின் சில பகுதிகளை கடந்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளினால் வாகனங்களை செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என […]

கனடாத் தமிழ் மரபியல் நடுவம் நடத்திய – தமிழர் மரபுரிமை மாதம்

கனடாத் தமிழ் மரபியல் நடுவம் நடத்திய 2024 ம் ஆண்டிற்குரிய தமிழர் மரபுரிமை மாதத்தின் தொடக்க விழா கடந்த திங்கட்கிழமை (08-01-2024) மாலை மார்க்கம் நகரில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக கனடா தமிழ்க் கல்லூரி மற்றும் அறிவகம் ஆகிய தமிழ் மொழி கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் இந்த கனடாத் தமிழ் மரபியல் நடுவத்தின் முக்கிய உறுப்புரிமை கொண்டவர்களாக உள்ளதால் நூற்றுக்கணக்கான தமிழாசிரியைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண நாடாளுமன்ற […]

வட மாகாண ஆளுநரை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றையதினம் (10.01.2024) இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் வட மாகாண ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என ஆளுநர் தெரிவித்தார். மேலும், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க […]

கனடிய பொருளாதாரம் தொடர்பில் இணைய வழி கருத்துக்கணிப்பு

இந்த ஆண்டில் கனடிய பொருளாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் பாதகமான நிலைப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் பொருளாதாரம், சாதகமாக அமையும் என மக்கள் கருதவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொல்லோரா ஸ்டேடஜிக் இன்சைட்ஸ் என்னும் நிறுவனத்தினால் இந்த இணைய வழி கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அநேகர், நாட்டின் பொருளாதாரம் குறித்து சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2023ம் ஆண்டில் மிக மோசமான விமான சேவை …….

எயார் கனடா விமான சேவை நிறுவனம் மிக மோசமான நேர முகாமைத்துவத்தைக் கொண்ட விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடுகளில் இயங்கி வரும் பத்து பெரிய விமான சேவை நிறுவனங்களில் எயார் கனடா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டில் மிக மோசமானது என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் 63 வீதமான விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.