பிழையாக அவசர அழைப்பு சேவையை பயன்படுத்துவோருக்கு அபராதம்

ஒன்றாரியோ மகாணத்தின் பிரம்ரன் நகரில் பொலிஸ் அவசர அழைப்பு சேவைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 911 என்னும் அவசர அழைப்பு சேவையை பிழையாக பயன்படுத்துவோர் தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பிரம்ரன் நகர மேயர் பெட்ரிக்; பிறவுண் எச்சரித்துள்ளார்.

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் குறித்து – இந்திய வெளியுறவு அமைச்சர்

கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இந்திய வெளியுறவு அமைச்சர் தமது கருத்தை முன்வைத்துள்ளார். கனடா அரசியல், காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளித்துள்ளது என்றும், கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். இப்படி அரசியலில் காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதுதான் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட காரணம் என தான் கருதுவதாக தெரிவித்த அமைச்சர், அதனால் இந்தியாவுக்கும் பயனில்லை, கனடாவுக்கும் பயனில்லை, துரதிர்ஷ்டவசமாக, […]

ரொறன்ரோவில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு

ரொறன்ரோவில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. காசா போர் தொடங்கியது முதல் இதுவரையில் ரொறன்ரோவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரோத உணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஓராண்டு காலப் பகுதியில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் இந்தக் காலப் பகுதியில் 48 சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ரொறன்ரோவில் இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் பதிவான மிக அதிகளவான சனத்தொகை வளர்ச்சி….

கனடிய மொத்த சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் கனடாவின் சனத்தொகையானது 430000ஆல் அதிகரித்துள்ளது. தற்காலிக அடிப்படையிலான வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோரின் வருகையின் காரணமாக சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளது. சுமார் 66 ஆண்டுகளின் பின்னர் ஒரு காலாண்டில் கனடாவில் பதிவான மிக அதிகளவான சனத்தொகை வளர்ச்சி இந்த ஆண்டின், மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ளது. கடந்த […]

அமெரிக்ககூட்டுப் பாதுகாப்பு படையில் – கனடா

ஹுதி போராளிகளின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் செங்கடலில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு படையில் கனடாவும் இணைந்து கொண்டுள்ளது. செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையணியினால் இந்த பாதுகாப்பு பணி முன்னெடுக்கப்பட உள்ளது. செங்கடலில் பரப்பில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இந்த பாதுகாப்பு படையணியை உருவாக்கியுள்ளன. யேமனில் இயங்கி வரும் ஹுதி போராளிகள் செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். ஹுதி போராளிகளின் அச்சுறுத்தல்களை […]

கனடியப் பிரஜைகள் அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்

கனடாவில் யூத எதிர்ப்பு நடவடிக்கைள் குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அச்சம் வெளியிட்டுள்ளார். அண்மையில் கனடாவின் ஒட்டாவாவ நகரில் 15 வயதான சிறுவனை பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். யூத சமூகத்தின் மீது தாக்குதல் நடத்த குறித்த சிறுவன் முயற்சித்தாக கனடிய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சிறுவன் மீது வெடிபொருட்கள் தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகின் ஏனைய பகுதிகளில் போன்றே கனடாவிலும் […]

சில நாடுகளுக்குச் செல்லவேண்டாம் – கனடா அரசு

விடுமுறை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், கனேடியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு ஆவலாக காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக, கனடா அரசு சில பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. சில நாடுகளில் குற்றச்செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல், அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக, அங்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு கனடா அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி, பயணிக்கவேண்டாம் என கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ள 21 நாடுகள் பட்டியலில் ரஷ்யா, உக்ரைன், ஏமன், சூடான், சிரியா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் அடங்கும். தேவைப்பட்டாலொழிய […]

கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி

கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஐந்தாவது காலாண்டாக நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் சரிவு பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளாகவே தொழில் வாய்ப்பு வெற்றிடங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் தொழில் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த இரண்டாம் காலாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மணித்தியால […]

குடும்ப ரெஸ்டூரன்டில் பீட்ஸா தயாரிப்பில் – 100 வயது மூதாட்டி

கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த 100 வயதான மூதாட்டியொருவர் பீட்ஸா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 100 வயதில் அனைவரும் ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருப்பார்கள் என்ற போதிலும், இந்த மூதாட்டி சற்றே வித்தியாசமானவர். என்டானிட்டோ லொமொனாகோ என்ற 100 வயதான மூதாட்டியே இந்த வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தி வருகினறார். குடும்ப ரெஸ்டூரன்டில் பீட்ஸா தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த பெண் வாரத்திற்கு மூன்று நாட்கள் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 65 வயதில் ஓய்வு பெற்றுக்கொண்ட மறுதி தினமே இந்த மூதாட்டி […]

ரொறன்ரோவில் வாடகையில் வீழ்ச்சி

ரொறன்ரோவில் வாடகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே, தொடர்ச்சியாக வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் நகரின் சராசரி வாடகைத் தொகை 2.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ரொறன்ரோவில் வாடகைத் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வந்தது. எனினும் அண்மைய இரண்டு மாதங்களாகவே வாடகைத் தொகை ஒப்பீட்டளவில் சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. எனினும், கனடாவில் வாடகை அதிகமான இரண்டாவது நகரமாக […]