பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

ரமழான் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் மத வழிபாடுகள் நடைபெறும் இஸ்லாமிய பள்ளிவாசல்களை அடையாளம் கண்டு சிறப்பு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனிடையே குண்டு தாக்குதல் நடத்தப்படும் என கிடைத்த தகவல் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ரமழானில் அடையாளம் காணப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான […]

கோபமடைந்த கர்தினால்…

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஒரு சாட்சியாக இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற நிலைக்கு இழுக்கப்பட்டுள்ளதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு அன்று 272 உயிர்களைப் பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஏப்ரல் 21, 2019 அன்று, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் […]

IMF – விவாதத்திற்கு திகதி நிர்ணயம்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளும் விவாதத்திற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இன்று (20) காலை ஏப்ரல் 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்களிலும் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கூடவுள்ளது.

தினமும் இரு வேளை குளிக்க வேண்டும்: வைத்தியர்கள் ஆலோசனை

வெப்பத்தினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார். மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகள் கூட தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.

புத்தாண்டு அழகன் மற்றும் அழகி (Photos)

பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய திருவிழா 2023’(சூரிய மங்கல்லய) நிறைவு நாள் வைபவம் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களின் பங்கேற்புடன், நாள் முழுவதும் இடம்பெற்ற இந்த புத்தாண்டு கொண்டாட்டம் பல புத்தாண்டு விளையாட்டுக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமயமான நடன நிகழ்ச்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டுகளித்தார். புத்தாண்டு அழகன் மற்றும் அழகி […]

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தென்படாத ‘ஹைபிரிட் சூரிய கிரகணம்’

ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்றைய தினம் (20) பதிவாகியுள்ளது. இது நிங்கலூ சூரிய கிரகணம் (Ningaloo Solar Eclipse) அல்லது ஹைபிரிட் சூரிய கிரகணம் (Hybrid Solar Eclipse ) என வானியல் அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு ‘சூரிய கிரகணம்’ என அழைக்கப்படுகின்றது. சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது ‘முழு சூரிய கிரகணம்’ எனவும் ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது ‘பகுதி […]

பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள்

கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் கட்டாரில் பணம் தருவதாக கூறி 6 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் 31 வயதுடையவர்கள்.

இந்திய பஸ்களில் இயந்திரக் கோளாறுகள் இல்லை…

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 500 பஸ்களில் இயந்திரக் கோளாறுகள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அறிவிக்கவில்லை என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள  டிப்போக்களுக்கு இந்திய கடன் உதவித் திட்டத்தின் மூலம் புதிய பஸ்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

முட்டைகளை விற்பனை செய்ய கட்டுப்பாட்டு விலை

எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சிவப்பு நிற (பழுப்பு முட்டை) யின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. […]

ரெண்டு பேருக்கும் கமடியா?

ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவிய போதும், அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அழிந்து வரும் உயிரினங்கள், தாவரங்களின் […]