தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு

தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மலையகத்தின் பிரதான நிகழ்வு, அட்டன் நீக்ரோதாரம விகாரையில் 16.04.2023 அன்று காலை 09.41 மணிக்கு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்கூறிய மாகம விமலதேரரினால் இடம்பெற்றது. இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்விற்கு தமிழ், சிங்கள, மூஸ்லிம் ஆகிய இனத்தவர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். (க.கிஷாந்தன்)

மீன்கள் திடீரென உயிரிழப்பு

கொத்மலை ஓயாவில் மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதாகவும், அவற்றை உணவுக்காக எடுக்க வேண்டாம் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அம்பேவெல முதல் மெரயா, எல்ஜின், அக்கரகந்த வரையான ஆற்றில் சுமார் 12 கிலோ மீற்றர் வரை மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதக்கின்றன. இந்நிலையில் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பிரதேசவாசிகளும், தோட்டத் தொழிலாளர்கள் இறந்த மீன்களை எடுத்துச்செல்கின்றனர் என தெரியவந்துள்ளது. இவ்வாறு இறந்த மீன்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என […]

முரளியின் கதை…

உலகில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை கொண்ட திரைப்படத்தின் போஸ்டர் இன்று (17) வெளியாகியுள்ளது. அந்த படத்தில் முரளிதரன் வேடத்தில் பிரபல இந்திய நடிகர் மதுர் மிட்டல் நடித்துள்ளார். திராவிட மொழியில் உருவாகி வரும் இப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய […]

விக்கியும் அரங்கத்துக்கு ஆதரவு- மனோ

“நாடாளுமன்ற தமிழ் அரங்கம்” என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர், முன்னாள் வமாச முதல்வர் சீ. வீ. விக்னேஸ்வரன் தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். இதன்படி TELO, DPLF, TMK ஆகிய கட்சிகள் தமது அதிகாரபூர்வ ஆதரவை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் WNF, UPF, DPF ஆகிய கட்சிகளுக்கு மேலதிகமாக தெரிவித்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

சிறிமாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால்…

மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 107 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளை ஏற்கொண்டிருந்தால் அரசாங்கத்தால் திருட முடியாது எனவும் […]

பாடசாலை விடுமுறை முடிந்தது..

அரச மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும்  ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. பாடசாலை நேர அட்டவணையின்படி, விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

சியம்பலாபிட்டிய பயணித்த ஜீப் விபத்து

கேகாலை, அவிசாவளை பிரதான வீதி, ருவன்வெல்ல, வந்தல பிரதேசத்தில், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த ஜீப் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது, ​​அமைச்சர் உட்பட 5 பேர் வாகனத்தில் இருந்தனர். இந்த விபத்தில் சியம்பலாபிட்டியவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, சிறு காயம் காரணமாக ராஜாங்க அமைச்சர் தற்போது கரவனெல்ல ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை – ஜப்பான்

ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க மிகவும் ஆவலாக உள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) தெற்காசியப் பிராந்தியத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவர்  எமோட்டோ சச்சிகோ தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான JICA இன் அர்ப்பணிப்பை எமோட்டோ சச்சிகோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இராஜாங்க கல்வியமைச்சரின் அறிவிப்பு

திட்டமிட்டப்படி நாளை (17) சலல அரச பாடசாலைகளும் இயங்கும் என இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளை பாடசாலைகள் திறக்கப்படாது என பரவிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீன பயணம் தாமதமாகுமாம்?

இலங்கைக் குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், காரணம் கூறாமல் குரங்குகளை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்வது மிகவும் சிக்கலான நிலை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குரங்குகள் அநுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ளை, கண்டி மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கைக்கு சொந்தமான விலங்குக் குழுவாகும்.