IMF – அதிரடி முடிவு

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்காலிகமாக அதிகரித்துள்ளது. இதற்கிணங்கவே இலங்கை மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு கடனுதவியை வழங்கியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடனுதவி வழங்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகள் அதனை முகாமைத்துவம் செய்யும் விதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு கடனுதவி […]

பொது போக்குவரத்து வசதிகள் பற்றிய விளக்கம்

புத்தாண்டுக்கு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்காக பல விசேட பேருந்துகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நீண்ட தூர சேவைகளுக்கான சில விசேட ரயில் பயணத்திட்டங்கள் இன்று (15) முதல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த குழந்தை

கஹட்டகஸ்திகிலிய நெகுதாவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து குழந்தை ஓன்று யிரிழந்துள்ளது. துரதிஷ்டவசமாக அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலம் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாடுகளின் திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளது

நீண்டகாலமாக குறைந்த மட்டத்தில் இருந்த கறவை மாடுகளின் திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளதாக மாகாண விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாய அமைச்சினால் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த நிலை அதிகரித்துள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டை வரவேற்ற மலையக மக்கள்…

பிறந்திருக்கும் சோபகிருது புத்தாண்டை மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து கொண்டாடினார்கள். புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும், அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும், விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அத்தோடு அட்டன் நீக்ரோதாரம விகாரையிலும், அட்டன் திருச்சிலுவை தேவாலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்டை மலையக பகுதிகளில் உள்ள மக்கள் கோவில்களுக்கு சென்று […]

சீனா குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா முடிவுக்குக் கொண்டு வந்து அரசியல் தீர்வைக் காண உதவாத வரையில் சீனாவுடன் நம்பகமான உறவைப் பேணுவது கடினம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்ட மீறல்களை எதிர்கொண்டு நடுநிலைமையை நம்ப முடியாது என சங்கத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறினார். வெளியுறவுக் கொள்கையின் தலைவர் ஜோசப் பொரெல், அனைத்து தரப்பினரும் ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைக்கு உடன்படுமாறு கேட்டுக் கொள்ளப்படவில்லை, மாறாக சட்டத்தை மீறுவது பற்றி சிந்திக்க வேண்டும் […]

வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற தயார்

இலங்கையில் கடன் வழங்குபவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான தமது திட்டத்தை அறிவிப்பதற்காக ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நேற்று பிற்பகல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனா இலங்கைக்கு உறுதி

இலங்கைக்கு நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்க தயாராக உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் அதன் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, சீன அமைச்சர் வேங் டொங்வேயும் (Wang Dongwei), இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, இலங்கைக்கான ஒத்துழைப்பை சீனா மீள உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே, சீன அமைச்சர் வேங் டொங்வேய் […]

மலையக மக்களின் இன்னல்கள் அகலட்டும் – VS

புத்தாண்டில் மலையக மக்களின் இன்னல்கள் அகலட்டும் என பிரார்த்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி என்ற சுமை அகன்று யாவரும் நலம் பெற்று நாட்டை மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முனைப்போடு செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கியமாக மலையக மக்களின் வாழ்விலும் நெருக்கடியான சூழ்நிலைகள் விலகி அவர்களின் எதிர்பார்ப்புகள் ஈடேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையுடன் புத்தாண்டில் காலடி வைப்போம்.

தமிழ், சிங்கள புத்தாண்டானது, அனைத்து மக்களுக்கும் மறுமலர்ச்சியையும், மற்றற்ற மகிழ்ச்சியையும்,  மன நிறைவையும்,  மகத்தான பல சுப விடயங்கள் ஈடேறும் ஆண்டாக அமைய, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ கொவிட் – 19 பெருந்தொற்று, அதன்பின்னரான பொருளாதார நெருக்கடி […]