கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்…

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் இலங்கையின் கடனாளிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்ற விதம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அங்கு அவர் கூறியதாவது, கடன் குறையுமா?, கடனை செலுத்த கொடுக்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? அல்லது வட்டி குறைக்கப்படுமா? இது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும். இலங்கையில் 2023-2027 க்கு இடையில் 24 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவெளி காணப்படுவதாக […]

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பானின் முன்னணி வர்த்தகக் குழுவான பசோனா குழுமத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இது ஜப்பானில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள், மனித வள மேம்பாடு, ஜப்பானிய முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருவது மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி, இலங்கைப் பணியாளர்களை வேலை வாய்ப்புகளுக்காக ஆட்சேர்ப்பு […]

ஒருதாய் மக்களாக ஒரே பாதையில் பயணித்தால் இலக்கு சாத்தியமாகும்.

புத்தாண்டு அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் ஒருதாய் மக்களாக ஒரே பாதையில் பயணித்தால் இலக்கு சாத்தியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும். சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை செய்கின்றனர். கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான போது நாம் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தோம். […]

நாங்களும் ரெடி…

நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம், உத்தராயண புண்ணிய கால வசந்த ருதுவில் பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில் 14.4.2023 கிருஷ்ணபட்சத்து நவமி திதியில் மேல்நோக்குள்ள திருவோணம் நட்சத்திரம் 2-ம் பாதத்திலும் மகர ராசியில் சிம்மம் லக்னத்திலும், சுக்கிரன் ஓரையிலும், மந்தயோகத்திலும் சந்திர மகாதசையில் ராகு புத்தி, ராகு அந்தரத்திலும், சகல செல்வங்களையும் தரப்போகும் சோபகிருது ஆண்டு மதியம் 1.57 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மதியம் 2.59 மணிக்கும் பிறக்கிறது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை […]

ADB வங்கியிலிருந்து ஒரு நல்ல செய்தி

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி  பணிப்பாளர் ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் சலுகை நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பதுளை நோக்கி சென்ற ரயிலில் மோதி உயிரிழந்த கிளாசோ ஸ்ரீதரன்

நுவரெலியா – நானு ஓயா பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) காலை சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நானு ஓயா புகையிரத நிலையத்திற்கு முன்பாக  இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் நானுஓயா கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை ஸ்ரீதரன்  என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு தற்போது நானுஓயா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத […]

புத்தகாயா பகுதியில் தீ விபத்து…

இந்தியாவின் பீகார் மாநிலம் புத்தகாயவில் உள்ள காய்கறி சந்தையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீயினால் 100க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தீ பரவியதன் பின்னர் சில கடைகளில் உள்ள பல எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திடீர் தீயினால் 6 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், தீ […]

இலங்கை பற்றிய முடிவு?

ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இன்று அறிவிக்கவுள்ளன. சம்பந்தப்பட்ட நாடுகள் அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன. அதன்படி அந்தந்த நாடுகளின் நிதியமைச்சர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

எவராயினும், எதுவாயினும் செய்வதை விரைவாக செய்ய வேண்டும் : மனோ

அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்ற தமிழ் அரங்கம் பேசக்கூடாது என்றே தான் கூறியதாக தமுகூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார். மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, ஈழத்தமிழர்,மலையகத்தமிழர், முஸ்லிம்கள் என தமிழ் பேசும் மக்களின் தேசிய அரசியல் அபிலாஷைகள் களத்திற்கு களம் மாறுபடுகின்றன. ஆகவே அவற்றை அவ்வந்த மக்களின் ஆணைகளை பெற்ற கட்சிகள் தேசியஇ சர்வதேசிய அரங்கங்களில் பேசட்டும். இங்கே, நாடெங்கும், வடக்கு, […]

பயணம் சொல்லிட்டு வா…

இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கைக்கு தீர்வொன்றை வழங்கும் வகையில், நாட்டிலுள்ள குரங்குகளை சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இந்த ​கோரிக்கைக்கு அமைய, முதற்கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளன. நாட்டிலிலுள்ள குரங்குகளை வெளிநாட்டிற்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குரங்கு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் […]