சித்திரைக்காக 13 ஆம் திகதியும் பஸ்கள்…

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைப் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை […]

இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ, உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம்

திம்புள்ளை, பத்தனை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேத்ரா பிளேஸ் பகுதிக்கு மேல் அமைந்துள்ள நீர்ப்போசன வனப் பிரதேசத்திற்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக அப்பகுதியில் 10 ஏக்கர் வரையுள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த தீக்காரணமாக தொலைபேசி வயர்களுக்கும் மின் வயர்களுக்கும் மற்றும் குடிநீரக் குழாய்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. குறித்த பகுதியிலிருந்தே சாந்திபுரம், சமாதானபுரம், நேத்ரா பிளேஸ், கொட்டகலை, கொமர்ஷல் உள்ளிட்ட பகுதியில் வாழும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினைப் பெற்றுக்கொள்கின்றன. […]

இலங்கை ஒன்றிணைந்து பங்களிப்பை வழங்குவது முக்கியமானது

நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா  தெரிவித்துள்ளார். உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்திய மாநாட்டில் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார். நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு இலங்கை ஒன்றிணைந்து தமது பங்களிப்பை வழங்குவது முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள் கிடைப்பது இப்படித்தான்

ஜூன் மாதம் முதல் சமூக நலன்புரி நன்மைகள் வழங்கும் பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த சபையின் தலைவர் விஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். 32 மில்லியனுக்கும் அதிகமான சமூக நலன்புரி நன்மை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதுபற்றி மேலும் கருத்து தெரிவித்த அந்த சபையின் தலைவர்… “பயன் பெற தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, அதை பிரதேச செயலகம் மட்டத்தில், கிராம அலுவலர் அலுவலகம் அளவில் காட்சிப்படுத்துவோம். வாய்ப்பு கிடைக்க […]

வைத்தியர்கள் எச்சரிக்கை…

எதிர்வரும் வாரத்தில் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என வைத்திய கலாநிதி சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார். அவரின் கருத்துப்படி, விபத்துக்களால் வருடாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். (இலங்கையில் பெரும்பாலான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது விபத்துக்கள் காரணமாகும். இது வருடத்திற்கு சுமார் 1.3 மில்லியன் ஆகும். இந்த வாரத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு உள்நோயாளி சிகிச்சைக்காக வருகிறார்கள்.” என தெரிவித்துள்ளார்

சீனாவில் முதல் பறவைக் காய்ச்சல் உயிரிழப்பு

சீனாவில் பறவைக் காய்ச்சலுக்கு (H3N8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்டாங் (Guangdong) மாகாணத்தின் Zhongshan நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த பெண் நோய் பாதிப்பிற்கு உள்ளாவதற்கு முன்பு ஒரு கோழிபண்ணைக்கு சென்றதாகவும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவைக் […]

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் […]

மலையக உறவுகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதற்கு முன்வர வேண்டும்

நாட்டை புதுயுகத்துக்குள் அழைத்துச் செல்லும் உயர் பணிக்கு எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த மக்கள், அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர்  அருணாச்சலம்  அரவிந்தகுமார்  தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் நாம் எம்மிடையே காணப்படும் கருத்து வேற்றுமைகளையும் அரசியல் முரண்பாடுகளையும் களைந்து நம் சமூகத்தின் மேம்பாட்டுக்காக எல்லோரும் பரஸ்பரம், புரிந்துணர்வு, நல்லெண்ணத் துடன் ஒன்றுபட்டு ஒற்றுமையோடு பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள எமது நாட்டையும் எமது […]

மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமானின் எண்ணகருவுக்கமைய தேசிய மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களின் உதவியோடு மலையக மக்களின் நிலைப் பேண்தகு அபிவிருத்தி திட்டங்கள் பல அமுல்படுத்தப்படவுள்ளதாக  பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார். மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்திற்கும், சர்வதேச நிறுவனமான வேர்ல்ட் விஷன் நிறுவனத்திற்கும் இடையே அண்மையில் […]

18 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து சேவை

சித்திரை புதுவருடத்திற்காக கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இதிபொலகே தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் இரவு 7.30 க்கு கொழும்பிலிருந்து பதுளை வரை ரயிலொன்றும் மாலை 5.20 க்கு பதுளையிலிருந்து கொழும்பு வரை ரயிலொன்றும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 5ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் காலை 6.30 க்கு கொழும்பிலிருந்து பதுளை வரை பயணிக்கும் ரயில் மற்றும் காலை 7 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு […]