புத்தாண்டுக்கு பின்னர் SLPPல் மாற்றம்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்காலத்தில் பலமான தலைவர்களால் வழிநடத்தப்படும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் இந்த மாற்றம் ஏற்படும் என நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை மட்டும் முன்னிறுத்தி நிற்கும் குழுவொன்றை முன்னிறுத்தவுள்ளதாக பாராளுமன்ற                      […]

கடுமையான கொள்கையில் கைத்தொழில் அமைச்சர்

இலங்கையில் கைத்தொழில்களுக்கு பாதுகாப்பு கொள்கையொன்று தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுவது அவசியமானது என அமைச்சர் குறிப்பிட்டார். இல்லையேல் உள்ளுர் கைத்தொழில்களை பேணுவது பெரும் பிரச்சினையாகி விடும் என்பதுடன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுக்க வேண்டும்.

கடந்த ஐந்து நாட்களில் 21 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 25 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் 1,345 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். மேலும், இந்த விபத்துக்களில் 2,446 பேர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, கடந்த ஐந்து நாட்களில் 21 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் […]

பொருளாதார மேம்பாட்டிற்கு நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கு புதிய வேலைத்திட்டம்

நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். நுவரெலியா நகர அபிவிருத்தி தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நுவரெலியா […]

மலையக பல்கலைக்கழகத்தை அமைக்க ஜனாதிபதி உத்தரவு

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் இது தொடர்பில் […]

ஆபத்தில் இருக்கும் நாடுகளுக்கான ஆதரவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் – IMF

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாஇ இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கருத்துக்களம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். அங்குஇ சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணத்திற்கான இலங்கையின் உரிமை தொடர்பாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். ‘முன்பு இல்லாத சவால்களை இப்போது எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஆபத்தில் இருக்கும் நடுத்தர வருமான நாடுகளுக்கான ஆதரவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சமீபத்தில் உக்ரைன் மற்றும் இலங்கைக்கு எங்கள் ஆதரவை வழங்கினோம். அந்த நாடுகள் செயல்படுகின்றன. […]

O/L ஒத்திவைப்பு

2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த O/L  பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெருந்தோட்ட குடும்பங்களை ஒதுக்கி விடுவதை ஏற்க போவதில்லை : தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 14,000/= இக்குடும்பங்களது வங்கி கணக்குகள் மூலம்  வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார சீர்திருத்தம் நிகழும் போது, மென்மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் பிரிவினருக்கு இத்தகைய மாதாந்த நலன்புரி கொடுப்பனவு வழங்குவது சரியானது. இது தொடர்பில் அரசையும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகிய இலங்கையின் அபிவிருத்தி பங்காளர்களையும் பாராட்டுகிறேன். ஆனால், இந்த நலன்புரி கொடுப்பனவு இலங்கையின் மிகவும் நாளாந்த […]

நிரந்தரமான அரசியல் தீர்வே அவசியம்

கச்சைத்தீவு ஒரு பிரச்சினையல்ல மாறாக இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வே அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலிடம் கோரியுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழகத்திற்கு சென்ற இந்திய பிரதமரிடம் தமிழக முதல்வர் கச்சைத்தீவு மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்திருத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சி.சிறிதரன்; இதனை தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 02 நாட்களுக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது 8000 ஆக காணப்படும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதே உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் நோக்கமாகும்.