VSக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் யோசணைக்கு ஆதரவு தெரிவித்த வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று(25) கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான வாக்கெடுப்பு நேற்று(24) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் […]

ஜனாதிபதியிடமிருந்து நல்ல செய்தி (Photos)

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்தார். இரு தரப்பினரதும் இணக்கப்பாடு இல்லாமல் பாரிய திட்டங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தங்களை இடைநிறுத்துவதை தவிர்ப்பதற்கு அவசியமான சட்டதிட்டங்களை உருவாக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பாரிய திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதை கட்டாயப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க […]

வட மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு…

வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,  குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், அமைச்சர் ஜீவன் தொண்டமானை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்புவில் உள்ள அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது,  வடக்கு மாகாணத்தில் குடிநீர் பிரச்சினையை […]

IMF பிரதநிதிகள் இலங்கையிடம்…

கடன் வேலைத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் அளவில் ​உள்நாட்டு, வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மே 11 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரை நாட்டில்  தங்கியிருந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை வௌியிட்டுள்ளனர்.

இந்த தோல்வி என்னுடையது அல்ல – ஜனக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த தோல்வி என ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த தோல்வி என்னுடையது அல்ல. இது ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்ட தோல்வி” என தெரிவித்தார்.

ஜப்பானுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவை ஜனாதிபதி சற்று முன்னர் சந்தித்துள்ளார். இதன் போது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பான உண்மைகளை தெரிவித்த ஜனாதிபதி, ஜப்பானிய முதலீடுகளையும் நாட்டுக்கு கொண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனகவை நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எதிராக 77 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்ப்பித்தார்.    

கூட்டணி எம்.பியொருவர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றார்- ஜீவன்

“தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். ஆனால் முற்போக்கு கூட்டணியில் உள்ள எம்.பியொருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் தான் அவர் கண்டி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் கூட வந்தார் என்பதையும் கூறியாக வேண்டும்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் […]

ஜூலை 15 முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது

ஜூலை 15 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 10% விலையில் திருத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியின் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, உள்ளூர் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் […]

நிவாரண திட்டத்தில் மெளனமாக இருப்பது நியாயமா?

“அன்று சமூர்த்தியில் எமது மக்கள் ஓரம்கட்டப்பட்ட போது மெளனமாக இருந்தார்கள். இன்று புதிய நிவாரண திட்டத்தில் எமது மக்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கும் போது புரளி என்கிறார்கள்.” என பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரித்திருத்த விவாதத்தத்தின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கருத்து வெளியிட்டார். எமது மக்கள் ஐந்தாறு பரம்பரையாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். இருநூறு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போதும் ஆரம்பநிலை பிரச்சினையையே பேச வேண்டியுள்ளது. எமது மக்கள் தொடர்ச்சியாக நிவாரண கொடுப்பனவுகளில் […]