கொடுத்த 7 பேர்ச்சஸ் நிலத்தையே மீள பறிக்கும் நிலை: வேலு குமார்

இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கு இ.தொ.க வின் சுயலாப நடவடிக்கைகளே காரணம் என நாவலபிட்டிய மாவில தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். மலையக பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு பாராபட்சங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இன்றும் தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலைமைக்கு இ.தொ.க வின் அரைநூற்றாண்டுக்கு மேலான சுயலாப அரசியல் நடவடிக்கைகளே காரணமாகும். இன்றும் மலையகத்தின் தோட்டங்களில் வேலை […]

நிவாரணத் திட்டங்களில் ஒரே வீடுகளில் வாழும் பல குடும்பங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்

அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரணத் திட்டம் மற்றும் உலக உணவுத் திட்டம் முன்னெடுக்கும் நிவாரண உதவித் திட்டங்களில் பெருந்தோட்ட மலையக மக்கள் நேரடியாக உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே  நடைபெற்ற கலந்துரையாடல் இவ்விடயம் வயுறுத்தப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் வே.இராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் […]

நலன்புரி திட்டங்களுக்குள் பெருந்தோட்ட மக்களையும் உள்வாங்க நடவடிக்கை…

சமுர்த்தி மற்றும் நலன்புரி வேலை திட்டங்களுக்குள் பெருந்தோட்ட மக்களையும் உள்வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் பெருந்தோட்ட துறையினருக்கான நலன்புரி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நிதி ராஜாங்க அமைச்சர் தலைமையில் நிதி அமைச்சில் நடைபெற்றது . இதன் போது குறித்த நலன்புரி திட்டங்களுக்காக பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்கப்பட்ட தரவுகளில் குறைபாடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதனை மீள் ஆய்வு செய்து உரியவர்களை இத்திட்டத்தினுள் […]

கயானாவில் பாடசாலை ஒன்றில் தீ

கயானாவில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கயானாவில் உள்ள மஹிதா உயர்தர பாடசாலையில் உள்ள தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று (22) நள்ளிரவு தீ பரவியதாகவும் சீரற்ற காலநிலை காரணமாக தீயை கட்டுப்படுத்துவதற்கு முடியாது போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் கயானா நாட்டுக்கு 03 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்த நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். மே மாதம் 24 முதல் 27 வரை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் ( Fumio Kishida) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான […]

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்களுக்கு திடீர் சுகவீனம்

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களில் 10 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக் பெற்றுக் கொண்டு வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ஏதேனும் […]

தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் – ஜீவன்

” சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் வெட்டப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது உண்மை கிடையாது. இம்முறை உரிய வகையிலேயே பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உதவி திட்டங்களை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது கிடைக்கும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இன்று (22) […]

இலங்கை மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் தனித்துவமான மைல்கல்

கூட்டு முயற்சிக்கான சிறந்த சாட்சியாக ஹெம்மாதகம நீர் வழங்கல் திட்டம் அமைந்துள்ளதாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் ஆர். டெமெட் செகர்சியோக்லு (R.Demet Sekercioglu) தெரிவித்தார். இலங்கை மக்களின் இயல்பு வாழ்வை கட்டியெழுப்புவதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் தனித்துவமான மைல்கல்லாக அமைந்துள்ள இந்தத் திட்டம் அமைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தூதுவர், ஆயிரக்கணக்கான மக்களின் தாகத்தைத் தணித்தல், சுகாதாரத்தைப் பாதுகாத்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட கூட்டு முயற்சி இது […]

சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்

இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம். பி. டி. யூ. கே. மாபா பதிரனவும் சினோபெக் நிறுவன எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோக திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் சென் சென்க்மிம் ( Chen Chengmim )ஆகியோர் ஜனாதிபதி […]

நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டுவருவார் ஜீவன் நம்பிக்கை

” நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார். எனவே, அவர் தலைமையின் கீழ் இந்நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கேகாலை மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் […]