SLFP செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவிக்கு மஹிந்த அமரவீர அல்லது திலங்க சுமதிபால ஆகியோரை ஏற்றுக்கொள்வதை நீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் இருக்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விறகு வெட்ட சென்றவரை காணவில்லை…

நுவரெலியா ஹவா – எலிய தோட்ட வனப்பகுதியில் விறகு வெட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளார். நேற்று (21) நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரைக் தேடும் நடவடிக்கைகளை வனப்பகுதியில் ஆரம்பித்துள்ளனர். இதன்போது, வனப்பகுதியின் மத்தியில் காணாமல் போனவருக்கு சொந்தமானது […]

பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடாத்துதல் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் பரீட்சை வினாக்களை விளம்பரப்படுத்துதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. […]

விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம்

வடமேல் மாகாணத்தில் இன்று (22) முதல் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை நடைமுறைப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது. இந்த டெங்கு தடுப்பு வாரமானது இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் செயற்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் இந்திக்க வீரசிங்க தெரிவித்தார்.  

தோட்டங்களில் பாதுகாப்பு முக்கியம்

“தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.” என நாவலப்பிட்டிய பரனகள தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இது தொர்பாக மேலும் பின்வருமாறு தெரிவித்தார். “பெருந்தோட்ட பகுதிகளில் வாழுகின்ற மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தோட்டங்களினது நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் அமுல்படுத்தி வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் […]

மற்றொரு இலங்கையர் வெளி நாட்டில் மர்மமான முறையில் மரணம்?

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் கடற்கரையில் இலங்கை இளைஞருடையது என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சடலம் 18-25 வயதுடைய இளைஞராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். எனினும் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மருத்துவ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35419 டெங்கு நோயாளர்கள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலைகளை மையமாக கொண்டு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு இணையாக வட மேல் மாகாணத்திலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை(22) ஆரம்பிக்கப்படவுள்ளது. 57 சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாய நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த […]

கௌரவமாக நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி (Photos)

கௌரவமாக நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா […]

மண்சரிவு முன் எச்சரிக்கை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இது இன்று (21) காலை 8 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை செல்லுபடியாகும். இதன்படி, காலி மாவட்டம், யக்கலமுல்ல, பத்தேகம, எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச மக்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அந்தந்தப் பாடசாலைகளுக்கு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.