சாரதிகளுக்கு எச்சரிக்கை…

பஸ் சாரதிகள் போதையில் பஸ்களை செலுத்துகிறார்களா? என்பதை கண்டறியும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வரிவிதிப்பு முறையில் மாற்றம்?

வரிவிதிப்பு முறையை மேலும் மாற்றுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார். வரி வசூல் முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக அரசு அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அவிசாவளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டியை அதிநவீன நகரமாக மேம்படுத்த எதிர்பார்ப்பு

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி பல்கலைக்கழகத்தை நிறுவ எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, ஜப்பானுக்கான தனது அடுத்த விஜயத்தின் போது அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக தாய்லாந்து, பூட்டான் போன்ற பௌத்த நாடுகளின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டதன் பின்னரே ஜனாதிபதி […]

விவசாய நவீனமயமாக்கல் அலுவலகத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டதுடன் இணைந்து செயற்படும் ஜனாதிபதி செயலகம், விவசாய அமைச்சு உட்பட ஏனைய அமைச்சுக்களின் மேலதிகச் செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான தரங்களில் இருக்கின்ற […]

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் விசேட கவனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார். வீட்டுப் பிரச்சினை உட்பட, பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் அவர்களின் நல்ல வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படாமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. […]

 G7 நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் கூட்டறிக்கை

 G7 நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். உலகின் 7 முன்னணி ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து நடத்தும் G7  அரச தலைவர்களின் கூட்டம் ஜப்பானில் நடைபெறுகின்றது. கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையின் கீழ் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடுவதற்கு  இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடன்  நிலைபேறான தன்மையால் ஏற்பட்டுள்ள  சவால்கள் இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடையாக இருப்பதாக G7 நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். […]

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்

பொரள்ள, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (20) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் 53 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

7,800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம்

ஜூன் மாதம் 15ஆம் திகதி 7,800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும். மேலும், எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் போன்ற அதிக ஆசிரியர் பற்றாக்குறை உள்ள […]

கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

இலங்கையில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. கனேடிய பிரதமர் மே 18 ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நாளாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சு, ஒரு நாட்டின் முக்கிய தலைவர் ஒருவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் பக்கச்சார்பான அறிக்கைகளால் கனடாவிலும் இலங்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக ஒற்றுமையின்மையும் வெறுப்பும் பரவி வருவதாக கூறுகிறது. இலங்கையில் நடைபெற்ற வெற்றிக் […]

14 வது தேசிய படைவீரர் தின நிகழ்வு…

தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை நினைவுகூர்வதற்கான சதுக்கத்தில் இன்று (19) நடைபெற்றது. மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் இராணுவத்தினர் வெற்றிகொண்டு 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன. யுத்தத்தில் இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுக்காப்பு படைகளை சேர்ந்த 28,619 படையினர் உயிர் நீத்தனர். 27,000 இற்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் இராணுவ சேவை […]