கடந்த கால தவறுகளை திருத்தியமைக்க முடியும்

முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் தள்ளப்பட்டமை மற்றும் தங்களது எதிர்காலம் தொடர்பில் இளையவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் தொடக்கம் அரசாங்க அதிகாரிகள் வரையில் அனைவரும் […]

சீனாவில் இருந்து நல்ல செய்தி

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீன நிதி நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், இந்த விஷயத்தில் சீனா உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

SJB பதவிகளில் மாற்றம்

சமகி ஜன பலவேகவின் (SJB) செயற்குழுவின் ஒப்புதலுடன் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (16) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சமகி ஜனபலவேகவின் உப பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

JEDB பேச்சு வார்த்தை வெற்றி

JEDB பெருந்தோட்ட யாக்கம் ளுடுளுPஊ மற்றும் எல்கடுவ பிளான்டேஷன் நிறுவன அதிகாரிகளுக்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரொமேஷ் பத்திரன நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தினுடைய முக்கிய உத்தியோகஸ்தர்கள் விஜயகுமார் தியாகராஜ் கிருஷ்ணகுமார் தாண்டவன் புவனேந்திரன் இடையிலான கலந்துரையாடல் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் […]

சீன மீன்பிடி படகு விபத்தில் சிக்கியது

39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு சீன வெளியுறவு அமைச்சகம் பல நாடுகளுக்கு தங்கள் தூதரகங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த கப்பலில் 17 சீன பிரஜைகள் 17 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் காணாமல் போயுள்ளனர்.

புதிய ஆளுநர்கள் (Photos)

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக  பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு

நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று (15) பதிவானதாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு 19 ஆவது வார நிறைவில், 1294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக தேசிய  டெங்கு ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த வருடத்தின் 19ஆவது வார […]

உலக வங்கி விசேட கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சார மறுசீரமைப்பு திட்டங்கள் மற்றும் அத்துறையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் காற்றாலை மின் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு உலக வங்கி வழங்கிய நிதியுதவிக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நன்றி தெரிவித்துள்ளார்.

நாடு பூராவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்

டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் […]

இலங்கையின் முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் நிர்மாணிக்க முடியும்

இலங்கை அணுசக்தி சபை, வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் என்ற வகையில் அதன் அமர்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கலந்து கொண்டார். இலங்கையின் முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் நிர்மாணிக்க முடியும் – இலங்கை அணுசக்தி சபை, துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரிவிப்பு அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்தற்கு அமைய நடைபெற்றால் ரஷ்ய தொழிநுட்ப உதவியுடனான முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் இலங்கையில் நிர்மாணிக்க முடியும் […]