பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு தேவையின்றி தலையிட இடம் கொடுக்க வேண்டாம்

“முந்தைய சமுர்த்தி திட்டத்தில் பெருந்தோட்ட மக்களை சேர்த்து கொள்வதில் குறைபாடு நிலவியதாக நாம் அறிந்துள்ளோம்.” “இது சமுர்த்தி அல்ல. இந்த அஸ்வெசும திட்டம், உலக வங்கி உதவியுடனான நலிவுற்ற மக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டமாகும். பெருந்தோட்ட குடும்பங்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்காமல், இத்திட்டதை நாம் முன்னெடுக்க மாட்டோம்” என்ற உறுதிமொழியை உலக வங்கியின் இலங்கைக்கான நாட்டு-பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் செர்வோஸ், தன்னை சந்தித்த மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவிடம் தெரிவித்தார். மனோ […]

மழையினால் 10,055-க்கும் அதிகளவானோர் பாதிப்பு

மழையினால் ஒன்பது மாவட்டங்களில் 2,511 குடும்பங்களை சேர்ந்த 10,055-க்கும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களால் 7 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மாத்தறை, காலி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கிங், நில்வளா கங்கைகளில் சிறு அளவிலான வௌ்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுபோகத்திற்கு யூரியா

2023 ஆண்டு சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். அதன்படி, 25 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் தேவாலயம் அருகே நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். 18 வயது இளைஞரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர் மற்றும் பொலிஸாரின் பதில் தாக்குதல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேருக்கு மேல் காயமடைந்தாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, அது வெகுஜன துப்பாக்கிச் சூடாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 225 துப்பாக்கிச் […]

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ⭕ காலி மாவட்டத்தின் நெலுவ, பத்தேகம, யக்கலமுல்ல மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் ⭕ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலக பிரிவு ⭕ களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுகள் ⭕ மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய, முலட்டியன, அக்குரஸ்ஸ, கொட்டபொல, பிட்டபெத்தர மற்றும் பஸ்கொட பிரதேச செயலக பிரிவுகள் ⭕ இரத்தினபுரி […]

இலங்கைக்கு “KA350 King Air” விமானம்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வழங்குவது தொடர்பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O’Neil) அளித்த கடிதம், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டெபன் இனால், அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பீச் கிராப்ட் “KA350 King Air” என்பது நவீன […]

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு

மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல்மாகாணத்தை முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக விரிவான அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, முறைசாரா நகர அபிவிருத்தி, பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத நிலைமையாக மாறும் எனவும் சுட்டிக்காட்டினார். மேல்மாகாண […]

தொழிலாளர்களை கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது VS எச்சரிக்கை

கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக நிவ்பர்க் தோட்ட காணியை அத்துமீறி கைப்பற்றுவதற்க்கு வெளியார் உட்புகுந்துள்ளனர் தோட்ட நிர்வாகத்தின் உத்தரவுடன் இளைஞர்களும் தொழிலாளர்களும் அவர்களை விரட்டுவதற்கு சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற கைகலப்பில் ஒரு சிலர் காயத்துக்கு இலக்கானதோடு அப்பாவி தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் . சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்… அரசாங்கம் […]

கல்வி அமைச்சு மீது குற்றச்சாட்டு

பாடசாலைகளைச் சுற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு கல்வி அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் உரிய பணியாளர்கள் இன்மையால் பாடசாலை தொடர்பான துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அந்த பாடசாலைகளுக்கு அருகில் கழிவுகள் குவிந்து டெங்கு நுளம்புகள் பரவுவது அதிகரித்துள்ளதாகவும்இ இது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை சுதந்திர ஆசிரியர் […]

எவரிடத்திலும் மண்டியிட வேண்டியதில்லை. – ஜனாதிபதி

இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை வோடர்ஸ் ஹெட்ஜில் நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார். “எமது நாடு பல துரதிஷ்டமான யுகங்களை கடந்து வந்துவிட்டது. இளையோரின் கலவரங்களை கண்டது, முப்பது […]