இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஐக்கிய இராச்சியம் ஒப்பந்த அடிப்படையில் ஆதரவளிக்க வேண்டும்

ஐக்கிய இராச்சியம் இலங்கை போன்ற நாடுகளுடன் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் மெத்திவ் ஆஃப்போர்ட் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஐக்கிய இராச்சியம் ஒப்பந்த அடிப்படையில் ஆதரவளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரித்தானியா வழங்கிய உதவிகள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெற்றது. இதன்போது கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி மெத்திவ் ஆஃப்போர்ட் இதளை கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பதுளை, ஹாலி – எல பகுதியில் வேன் விபத்து- 11 வைத்தியசாலையில்

பதுளை, ஹாலி – எல பகுதியில் நடனக் குழுவை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேனை நடனக் குழுவின் உரிமையாளரே ஓட்டிச் சென்றதாகவும், அவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வேன் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட எட்டு சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்கள் மற்றும் […]

குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள்

பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட தேயிலைமலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஆறு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (12) மாலை இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். காயங்களுக்கு உள்ளான ஆறு தொழிலாளர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்து […]

டெங்கு: சூழலை துப்பரவாக வைத்துக்கொள்தல் அவசியம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள்  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவற்றில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். மழையுடனான வானிலையுடன் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவுவதால், பொதுமக்கள் தத்தம் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்தல் அவசியம் என டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகாரப் பரவலாக்கம் அவசியமாகிறது

சரியான பொது முடிவுகளை எடுக்கும் போது அதற்கு நிபந்தனையின்றி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று (13) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “அரசியல் களத்தில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாகவே காணப்படுகின்றது. அதற்கு மாறாக சொல்வதை செய்யும் கலாச்சாரம் உருவாகினால் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். எதிர்கட்சி என்ற வகையில் நல்ல […]

கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்திற்காக கல்வியை உருவாக்க வேண்டும்

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த பத்து வருடங்களில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்காக செலவிட்டிருந்தால் ஆசியாவின் மிகச் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். திறன் மற்றும் தொழில் கண்காட்சியான “skills […]

தாதியர் சேவையை மேம்படுத்த வேண்டும்

“ஹெல்த் டுவரிஸம்” (Health Tourism) மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை போன்ற அழகிய சூழலைக் கொண்ட நாட்டில் “ ஹெல்த் டுவரிஸம்” வேலைத்திட்டம் சாதகமாக இருப்பதாகவும், தாதியர் சேவையின் ஊடாகவும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நாட்டுக்கு வருமானம் தரும் வர்த்தகங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு […]

மலையக ரயில் போக்குவரத்துக்கு தடை

மலையக புகையிரத பாதையில் ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான புகையிரத போக்குவரத்து இன்னும் வழமைக்கப்படவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக நேற்று (12) பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. இதன் காரணமாக கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் மற்றும் பதுளையிலிருந்து நானுஓயா வரை பயணிக்கும் புகையிரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நலன்புரி உதவித் திட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிப்பு – உதயகுமார் 

நலன்புரி உதவித் திட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ம.உதயகுமார் தெரிவிததுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்… “நமது நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு உதவிகள் மற்றும் நலன்புரித் திட்டங்கள் மிகவும் இன்றியமையாதது. நாட்டில் 2019ம் ஆண்டில் 11.3 சதவீதமாக இருந்த வறுமை நிலை 2020ம் ஆண்டில் […]

இறக்குமதி பால் மாவின் விலை திருத்தம் செய்யப்படும்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய மே 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.