“Fat Man” புகழ் ரவீந்தர் இயக்குனராக அவதாரம்!!!

“Fat Man” புகழ் ரவீந்தர் இயக்குனராக  அவதாரம்!!!

” Fat man facts ” யூடியூப் செனல் ஊடாக தமிழக மட்டுமன்றி உலக முழுவதும் வாழும் பல கோடி தமிழர்களின் உள்ளத்தை கவிர்ந்த பிரபல சினிமா படத்தயாரிப்பாளரான ரவீந்திரர் சந்திரசேகரன் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் முதல் முதலாக இயக்க இருக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

” மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்” என டைட்டிலிலே வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

மிகவும் மகிழ்ச்சியாக அவர் சொன்னதை சுருக்கமாக தருகிறோம்.

இதற்கான படப்பூசை அன்மையில் நடைப்பெற்றது. இந்த படத்தில் இசையப்பாளராக இளம் பெண்ணான ப்ரியா மல்லி அறிமுகமாகிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் ரவீந்திரர் அவர்களை நாம் தொடர்பு கொண்டோம்…

” நான் இந்த படத்தின் ஸ்கிரிப்டை கவனமாக ரெடி பண்ணி இருக்கேன், மகளிர் கல்லூரி ஒன்றில் ஒரு மாணவனுக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அவன் அங்கே செய்யும் சேட்டைகளையும் லூட்டிகளையும் நகைச்சுவையாக தர இருக்கிறோம்.

அது மாத்திரமன்றி சமூக கருத்தொன்றும் இந்த கதையில் இருக்கிறது.

படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகி குறுகிய காலத்தில் தயாரிக்கப்படும் என இயக்குனர் ரவீந்தர் சொன்னார்.

மேலும் இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் இடம்பெறும் என்பதையும் சொன்னார்.

இந்த படம் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்

administrator

Related Articles