IPL போட்டிகளில் பணமே முன்னிலைப்படுத்தப்படுகின்றது

IPL போட்டிகளில் பணமே முன்னிலைப்படுத்தப்படுகின்றது


இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பணத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக பிரபல தென் ஆபிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டெல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளின் போது கிரிக்கட் மறக்கப்படுவதுடன் பணமே முதன்மைப்படுத்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளை விடவும் இலங்கையில் நடாத்தப்படும் எல்.பி.எல் மற்றும் பாகிஸ்தானில் நடாத்தப்படும் பி.எஸ்.எல் போட்டிகள் சிறந்தவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.பி;.எல் போட்டித் தொடரில் இம்முறை ஸ்டெய்ன் பங்கேற்கவில்லை என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தை முன்னிலைப்படுத்துவதுடன் நீண்ட நாட்கள் போட்டித் தொடர் நடாத்தப்படுவதனால் தாம் இம்முறை ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles